நாம் தினமும் சமையலில் பயன்படுத்தப்படும் சீரகம்தான் நம் சமையலையில் உள்ள மிகச் சிறந்த மூலிகை.
சீர் + அகம் – சீரகம் , இதில் அகம் என்பது உடலைக் குறிக்கின்றது. அகத்தை சீர் செய்யும் என்பதால் சீரகம் என பெயர் பெற்றதாகவும் வரலாற்றில கூறப்பட்டுள்ளது. இது ஒரு மருத்துவ மூலிகை. வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் கிடைக்கும் இந்த சீரகம் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது.
நமக்கு வரக்கூடி பெரும்பிரச்சனைகளுக்கு தீர்வு வீட்டிலேயே கிடைத்தால் நல்லது தானே அனைவரின் கிட்சனிலும் இருக்கும் ஒரு பொருள் சீரகம். இது மிகவும் குட்டியாக இருந்தாலும் இதன் வாசம் வீடு முழுக்க இழுக்கும். சீரகத்தில் இரும்புச்சத்து, தாமிரம், ஆக்சிஜனேற்ற பண்பு உள்ளது. வைட்டமின் ஏ, சி உள்ளது. துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை நம் உடலில் பிரச்சனைகளை சரி செய்கின்றது.
வயிற்று பிரச்சனைகளில் மிகவும் முக்கியமான பிரச்சனை, அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை வாய்வு பிரச்சனை. இதற்கு சிறந்த மருந்து என்றால் அது சீரகம்தான் சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து இந்த நீரை பருகி வந்தால் வாய்வு குறைந்து உபாதைகள் தீரும் அல்லது சீரகம் ஒரு ஸ்பூன், சுக்கு அரை ஸ்பூன், கல் உப்பு கால் ஸ்பூன் சேர்த்து அரைத்து உணவுக்கு முன்பு வெதுவெதுப்பான நீரில் இதை குடித்து வந்தால் வாய்வு பிரச்சனை தீரும்.
இதே போல செரிமான பிரச்சனைக்கும் சீரகம் தீர்வாக உள்ளது. 20 கிராம் சீகரத்துடன் 200 மிலி தண்ணீர் சேர்த்து சீரகத்தை வறுத்துக் கொண்டு தண்ணீருடன் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து குடித்து வந்தால் செரிமான பிரச்சனை தீரும்.
பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்றுவலியை குணமாக்க இந்த சீரகம் பயன்படுகின்றது. இந்த சீரகம் ஆன்டீஸ்பாஸ்மோடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டுள்ளது. வலியில் இருந்து நிவாரணம் அளிக்கின்றது. 50 கிராம் சீரகம் வறுத்து பொடியாக்கிக் கொண்டு அத்துடன் வெல்லம் சிறிது சேர்த்து மாத்திரை போல் உருட்டி மாதவிடாய் நாளுக்கு 2 நாட்கள் முன்பு 3 வேளை சாப்பிட்டு வந்தால் வலி இருக்காது.
தாய்ப்பால் சுரக்க இந்த சீரகம் முக்கிய பங்கு வகிக்கின்றது. குழந்தை பேறு பெற்றவுடன் சந்திக்கும் பிரச்சனை தாய்ப்பால் சுரக்காததுதான். அந்த சமயங்களில் சிலர் பூண்டு சாப்பிட சொல்வார்கள் அதுவும் நல்லதுதான். அதே நேரத்தில் சீரகத்தை சேர்த்துக் கொண்டால் இரும்புச் சத்து கிடைப்பதோடு தாய்ப்பால் சுரக்கும். வெதுவெதுப்பான பாலில் சிறிது சர்க்கரை சேர்த்து சீரகம் (பொடியாக) ஒரு ஸ்பூன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.