தைராய்டு நமது கழுத்தின் கீழ் பகுதியில் பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கும் சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோன்கள் சீராக இருந்தால் உடலின் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும். இல்லையெனில் வளர்சிதை மாற்றத்தில் பிரச்சனை உண்டு செய்யும்.
குரல்வளையின் கீழ் பகுதியில் அமைந்திருக்கும் ஹைப்போதலாமாஸ் பிட்யூட்டரிக்கு சிக்னல் கொடுக்கும் போது ஹார்மோன் சுரக்கும். இந்த ஹார்மோன் சுரப்பு குறைவாக இருந்தால் அது ஹைப்போதைராய்டு என்று அழைக்கப்படுகிறது. இந்நிலை கொண்டவர்கள் என்ன மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
சோயா, சோயா பால், டோஃபு போன்றவற்றை ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். சோயாவில் இருக்கும் சில சேர்மங்கள் ஐசோஃப்ளோவன்ஸ் எனப்படும். இது தைராய்டில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கலாம். அதிகப்படியான சோயா நுகர்வு ஹைப்போ தைராய்டிசத்துக்கு ஆபத்தை அதிகரிக்க வாய்ப்புண்டு என கண்டறியப்பட்டுள்ளது.
கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகு உங்கள் ஸ்டாமினோவை அதிகரிக்க செய்யும் உணவுகள்! மார்ச் 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வில், சோயா தைராய்டு ஹார்மோன்களின் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் தைராய்டு துண்டுதல் ஹார்மோன் அளவை உயர்த்துகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் சோயாவின் நுகர்வு தைராய்டு மருந்துகளை உறிஞ்சும் திறனில் தலையிடக்கூடும்.
க்ரூசிஃபெரஸ் காய்கறிகள் பச்சை காய்கறிகள், முட்டை கோஸ், ப்ரக்கோலி,போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவை நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்களும் இணைந்துள்ளன. ஆனால் ஐயோடின் குறைபாடு இருந்தால் அது ஹார்மோன் உற்பத்தியில் தலையிடலாம். அதனால் இதை தவிர்ப்பது அல்லது கட்டுப்படுத்துவது நல்லது.
இந்த காய்கறிகளை ஜீரணிப்பது அயோடினை பயன்படுத்துவதற்கான தைராய்டின் திறனை குறைக்கும் என்று ஆராய்ச்சி சொல்கிறது.
ஹைப்போ தைராய்டிசம் மற்றும் அயோடின் குறைபாடு ஆகிய இரண்டையும் நீங்கள் கண்டறிந்தால் இந்த காய்கறிகள் குறைவான தீங்கு விளைவிக்க கூடிய விஷயங்களை கொண்டுள்ளன. இந்த காய்கறிகள் தைராய்சு சுரப்பியில் ஏற்படுத்தும் விளைவை குறைக்கும்.
க்ளூட்டன் உணவுகள் ஹைப்போ தைராய்டிசம் குளூட்டன் சத்து அதிகமுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். குளூட்டன் அதிகமுள்ள பிரெட், கோதுமை, பிஸ்கட், பாஸ்தா போன்றவற்றிலும், கோதுமை, பார்லி, கம்பு மற்றும் பிற தானியங்களிலிருந்து பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள பசையம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் அல்லது எடுத்துகொள்ளும் போது கவனத்தில் கொள்ள வேண்டும்.
செலியாக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசையம் சிறுகுடலை எரிச்சலடைய செய்யலாம். மேலும் தைராய்டு ஹார்மோன் மாற்று மருந்துகளை உறிஞ்சுவதை தடுக்கலாம்.
எண்டோகிரைன் இணைப்புகள் இதழில் மே 2017 -ல் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில் ஹைப்போ தைராய்டிசம் மற்றும் செலியாக் நோய் ஆகியவை பெரும்பாலும் ஒன்றாக காணப்பட்டது. பசையம் இல்லாத உணவு தைராய்டு நிலைமைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் என்பதை எந்த ஆராய்ச்சியும் நிரூபிக்கவில்லை.
குளூட்டன் பிரச்சனை இருப்பவர்கள் ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெற்றுகொண்ட பிறகு உணவு முறைகளை அமைக்கலாம்.
கொழுப்பு நிறைந்த உணவுகள் வெண்ணெய், இறைச்சி, வறுக்கப்பட்ட கொழுப்பு உணவுகள் தவிர்க்க வேண்டும். தைராய்டு ஹார்மோன் மாற்று மருந்துகளை உறிஞ்சுவதற்கான உடலின் திறனை கொழுப்பு சீர்குலைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஹார்மோன் உற்பத்தி செய்யும் தைராய்டின் திறனுக்கு கொழுப்புகள் தலையிடக்கூடும். மருத்துவ வலுநர்கள் வறுத்த உணவுகள், மயோனைஸ், வெண்ணெய் மற்றும் இறைச்சியின் கொழுப்பு போன்ற மூலங்களிலிருந்து கொழுப்பு உட்கொள்வதை தவிர்க்கவோ குறைக்கவோ செய்ய அறிவுறுத்துகிறார்கள்.
சர்க்கரை சத்து நிறைந்த உணவு பொருள்கள் உதாரணத்துக்கு கேக் வகைகள் போன்றவை தவிர்க்க வேண்டும். ஹைப்போ தைராய்டு உடலின் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும்.கவனக்குறைவாக இருந்தால் சர்க்கரை சத்து அதிகம் எடுத்துகொண்ட உணவுகள் உங்கள் எடையை அதிகரிக்க செய்யும்.
நெஞ்செரிச்சல் பிரச்சனைக்கு எளிமையான தீர்வு நீங்கள் இதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது ஊட்டச்சத்துக்கள் இல்லாத கலோரிகள் அதிகம் கொண்டவை. அதனால் உண்ணும் உணவிலும் சர்க்கரை அளவை குறைப்பது நல்லது. அல்லது முற்றிலும் அகற்றுவதே நல்லது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஹைப்போ தைராய்டு கொண்டிருப்பவர்கள் நார்ச்சத்து பெறுவது நல்லது. ஆனால் அதிகமாக எடுத்துகொள்ளும் போது அது தைராய்டிசம் சிகிச்சையை சிக்கலாக்கும்.முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பீன்ஸ் வகைகள் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றிலிருந்து வரும் நார்ச்சத்துக்கள் செரிமான அமைப்பை பாதிக்கின்றன. அதிக நார்ச்சத்துள்ள உணவு எடுப்பவர்கள் ஆலோசனை செய்துவிட்டு எடுக்கலாம். காஃபி ஹைப்போ தைராய்டு கொண்டிருப்பவர்கள் நார்ச்சத்து பெறுவது நல்லது. ஆனால் அதிகமாக எடுத்துகொள்ளும் போது அது தைராய்டிசம் சிகிச்சையை சிக்கலாக்கும்.
ஆல்கஹால் எடுத்துகொள்வது உடலில் உள்ள தைராய்டு ஹார்மோன் அளவுகள் மற்றும் உற்பத்தி செய்யும் திறன் இரண்டையும் பாதிக்க கூடும் என்று இந்தியன் ஜர்னல் ஆஃப் எண்டோகிரைனாலஜி அண்ட் மெட்டபாலிசத்தில் ஆய்வு தெரிவிக்கிறது.
ஆல்கஹால் தைராய்டு சுரப்பியில் நச்சு விளைவை கொண்டிருப்பதாக தோன்றுகிறது. மேலும் தைராய்டு ஹார்மோனை பயன்படுத்துவதற்கான உடலின் திறனை அடக்குகிறது. ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்கள் ஆல்கஹால் தவிர்க்க வேண்டும் அல்லது கண்டிப்பாக கட்டுக்குள் எடுத்துகொள்ள வேண்டும்.