fbpx

Tips : முகம் தங்கம் போல மின்னுவதற்கு இரவில் இதை ட்ரை பண்ணி பாருங்க.!?

பொதுவாக பலருக்கும் முகத்தில் முகப்பருக்கள், தேம்பல், மரு என அழகை கெடுப்பது போல இருப்பது தன்னம்பிக்கையை குறைக்கிறது. இதற்காக பல மணி நேரங்கள் அழகு நிலையங்களில் செலவிட்டாலும் நேர விரையம் மற்றும் பணவிரயம் ஏற்படுவதை தவிர எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படுவதில்லை. ஆனால் இந்த பிரச்சனைக்கு எளிமையாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சரி செய்யலாம். குறிப்பாக பாதாம் வைத்து வீட்டிலேயே கிரீம் தயாரித்து முகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை குறித்து பார்க்கலாம்?

முதலில் 10 பாதாமை நன்றாக ஊற வைத்து கொள்ள வேண்டும். ஊற வைத்த பாதாமை தோல் நீக்கி ஒரு மிக்ஸி ஜாரில் காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த கலவையை வடிகட்டி கற்றாழை ஜெல் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும். பின்பு இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக முகத்தில் இந்த கிரீமை அப்ளை செய்து காலையில் எழுந்து முகத்தை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த கிரீம் முகத்தில் உள்ள தோல் சுருக்கங்களை மறைய வைத்து முகத்தை பளபளப்பாக இருக்க செய்கிறது. மேலும் கருவளையம், தேம்பல், பிக்மென்டேஷன் போன்ற பிரச்சனைகளையும் சரி செய்கிறது. கண்களில் உள்ள கருவளையம், முகப்பருக்கள் போன்றவற்றை சரி செய்வதோடு, முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதுச் செல்கள் உருவாக வழிவகை செய்கிறது.

மேலும் வைட்டமின் சி நிறைந்த பாதாமை முகத்தில் தேய்க்கும் போது முகத்தில் கொலாஜன் உருவாகச் செய்து ரோமங்கள் மற்றும் அழுக்குகளை நீக்கி முகத்தை பொலிவடைய செய்கிறது. இந்த கிரீமை முகத்திற்கு மட்டுமல்லாது தோலில் எந்த இடத்தில் புண்கள் மற்றும் காயங்கள் இருந்தாலும் தேய்த்து வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary : benefits of applying badham cream

Read more : மாசிமகம் நாளில் புனித நீரில் நீராட காரணம் இதுதான் தெரியுமா.!?

Rupa

Next Post

Rape | 'வேலை கேட்க சென்ற நர்ஸ்'..!! 'வெறித்தனமாக பாய்ந்த டாக்டர்'..!! அரண்டுபோன மருத்துவமனை..!!

Sat Feb 24 , 2024
அசாம் மாநிலத்தில் வேலை கேட்டு மருத்துவமனைக்குச் சென்ற நர்ஸை பலாத்காரம் செய்ய முயன்ற டாக்டரை காவல்துறையினர் கைது செய்தனர். அசாம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் நர்ஸ் ஒருவர் வேலை கேட்டு மருத்துவமனை ஒன்றை அணுகினார். அங்கு அவர் மருத்துவமனையின் உரிமையாளரையும், மூத்த மருத்துவரையும் சந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். இதைத் தொடர்ந்து தனி அறையில் நர்சை, இன்டர்வியூ செய்த மருத்துவர் திடீரென அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அந்தப் பெண் […]

You May Like