fbpx

கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்தாகும் நெயில் பாலிஷ்.. என்ன காரணம் தெரியுமா..?

பொதுவாக உடலுக்கு பெண்கள் பலரும் பல்வேறு அழகு சாதன பொருட்கள் பயன்படுத்தி வருகிறார்கள். முகத்தை அழகுபடுத்துவது போலவே தங்கள் கைகளையும் அழகுபடுத்த நகங்களில் நெயில் பாலிஷ் உபயோகப்படுத்துகிறார்கள். இது எந்த அளவில் உடலுக்கு தீமையை ஏற்படுத்துகிறது என்பதை குறித்து பார்க்கலாம்

குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கைகளில் நெயில் பாலிஷ் போட்டுக்கொள்ளும் போது அது வயிற்றில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நெயில் பாலிசியில் உள்ள இரசாயனங்கள் நம் உடலில் கலந்து தாயின் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு வயிற்றில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மேலும் ஒரு சிலர் குழந்தைகளுக்கும் நெயில் பாலிஷ் போடு்கின்றனர். குழந்தைகள் கையை வாயில் வைக்கும் போது அதில் உள்ள கேடு விளைவிக்கும் ரசாயனமான பார்மாலிடிகிடு, டிபூட்டல் பத்தாலேட் போன்றவை உடலில் கலந்து பல்வேறு நோய்களை ஏற்படுத்துகிறது.

இதன்படி தலைவலி, நுரையீரல் பாதிப்பு, புற்று நோய் பாதிப்பு, நகம் நிறம் மாறுதல், சுவாச கோளாறு போன்ற பல்வேறு பாதிப்புகள் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்படும்.  குறிப்பாக இதில் உள்ள பார்மாலிடிகைட் ரசாயனம் மூளையை பாதித்து மனம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கிறது.

Baskar

Next Post

மாரடைப்பு பயத்தை போக்கும் பச்சை வெங்காயம்..! சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்து.!

Fri Jan 19 , 2024
உணவில் சுவை மற்றும் செரிமான மண்டலத்தை மேம்படுத்தக்கூடிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது நிறைய மருத்துவ நன்மைகள் கிடைக்கிறது. வெங்காயம் நிறைய விட்டமின் சி சத்துக்களை கொண்டுள்ளது. இது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகின்றது. குளிர்காலத்தில் அடிக்கடி ஜலதோஷம், ஜுரம் மற்றும் வைரஸ் தாக்குதல்களால் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும். இப்படிப்பட்ட நேரத்தில் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் அது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு […]

You May Like