fbpx

வாடகைத்தாய் மூலம்குழந்தை பெற என்ன விதிகளை பின்பற்ற வேண்டும்… !

வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ள சில சட்டத்திட்டங்களை கடந்த ஜனவரி 2022ல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அது தொடர்பான தகவல்களை பார்க்கலாம்.

வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டம் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. வாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதா மறுபரிசீலனை செய்த பின்னர் பிப்ரவரி 5, 2020ல் நிலைக்குழு முன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

2021ம் ஆண்டு குளிர்காலக் கூட்டத்தொடரில் இரு அவைகளும் இது குறித்த மசோதாவை நிறைவேற்றியது. குடியரசுத் தலைவரால் கையெழுத்திடப்பட்டு 2022ம் ஆண்டு ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது.

ஒரு பெண் ஒரு தம்பதியினருக்கு குழந்தையை பெற்றுக்கொடுக்க சில விதிமுறைகள் இந்த சட்டத்தின்படி கையாளப்படுகின்றது. குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இது குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதியுடையவர்களுக்கானதல்ல. யாரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதோ அவர்கள் சட்ட விதிகளைப் பின்பற்றி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் , தவறான நோக்கங்களுக்காக இதை பயன்படுத்தக்கூடாது. விற்பனை , பாலியல் தொழில் வேறு ஏதேனும் தவறான விஷயங்களுக்கு இது போல செய்வதற்கு அனுமதி மறுக்கப்படும். குழந்தை பிறந்தவுடன் தம்பதியினரின் பயோ குழந்தையாக கருதப்படும். அத்தகைய கருவை கலைக்க வேண்டும் என்றால் அதற்கும் சில விதிமுறைகள் உள்ளது. இதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்..

இன்னும் சில விதிமுறைகள்:

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு  மனைவியின் வயது 25 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.  கணவனின் வயது 26-55 வயதுக்குள் இருக்கலாம். கண்டிப்பாக திருமணமாகி 5 ஆண்டுகள் முடிவடைந்திருக்க வேண்டும். மேலும் இந்த தம்பதிக்கு பயோ குழந்தை இருக்கக்கூடாது. அல்லது தத்தெடுக்கப்பட்ட குழந்தையும் அவர்களிடம் இருக்க கூடாது. ஒருவேளை அப்படி இருந்தால் அந்த குழந்தைக்கு ஏதாவது குறைபாடு இருந்தால் அவை கருத்தில் கொள்ளப்படும். முக்கியமாக அந்த வாடகைத் தாய் அவரின் உறவினராக இருக்க வேண்டும்.

Next Post

தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு..? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்..!!

Mon Oct 10 , 2022
தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தப்படுமா? என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் DPI வளாகத்தில் 61 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பதவி உயர்வு ஆணையை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “மழைக்காலத்துக்கு முன்னரே இடியும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் உள்ள கோப்புகள், வருகைப் பதிவேடு […]

You May Like