fbpx

இளம் பெண்களே! இதை நீங்கள் செய்தால் இனி உங்களுக்கு என்றும் இளமை தான்!

பெண்கள் எல்லாவற்றிலுமே சற்று மும்முரமாகத்தான் இருப்பார்கள். அதிலும் அவர்கள் உடை மாற்றுவது, அலங்காரம் செய்வது என்று தான் சார்ந்த அனைத்து விஷயங்களுமே மிகவும் கவனமாக இருப்பார்கள். ஆனால் தன்னுடைய சருமத்திற்கு அழகு மேன்மேலும் கூட வேண்டும் என்ற ஆர்வத்தால் பல இளம் பெண்கள் அழகு சாதன பொருட்கள் என்ற பெயரில் பல கெமிக்கல்கள் கலந்த பொருட்களை பயன்படுத்தி அதன் மூலமாக தங்களுடைய அழகை நிரந்தரமாக இழந்து வருகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆனால் பெண்களுக்கு தங்களுடைய அழகை மேம்படுத்துவதற்கு எண்ணற்ற இயற்கையான பொருட்கள் இருந்தும் தற்போது பல ரசாயனங்கள் கலந்த பொருட்கள் தான் அதிக அளவில் வரவேற்பை பெற்றுள்ளன. ஆனால் தோல் பராமரிப்பு என்று வந்து விட்டால் ரசாயனம் கலந்த பொருட்களை பெண்கள் சற்றே தள்ளி வைப்பது மிகவும் நன்று. அதற்கு பதிலாக இயற்கையான பொருட்களை தேர்வு செய்து பயன்படுத்துங்கள் என்பதுதான் பலரின் வேண்டுகோளாக இருக்கிறது.

முன்பெல்லாம் பெண்கள் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக நீராடும் போது முகத்தில் மஞ்சள் பூசி நீராடுவார்கள். அப்படி நீராடும் பெண்களுக்கு சருமத்தில் அவ்வளவு எளிதில் எந்த விதமான நோயும் வருவதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. தற்போது பிம்பிள் என்று சொல்லப்படும் முகப்பருக்கள் இளம் தலைமுறையினரிடையே அதிகமாக காணப்படுகிறது. ஆனால் இந்த மஞ்சள் பூசி குளித்த அந்த காலத்து பெண்களிடையே இந்த முகப்பருக்கள் என்ற பிரச்சினை இருந்ததில்லை. முகம் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், வழவழப்பாகவும் இருக்கும்.

பெண்களின் சருமம் பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கு தங்களுடைய வீட்டிலேயே சொந்தமாக இருக்கக்கூடிய சில எளிதான அழகு குறிப்புகள் இருக்கின்றன அதில் ஒன்றுதான் ஆளி விதை. இந்த ஆளி விதை தங்களுடைய உடலுக்கு மட்டுமல்ல தங்களுடைய சருமத்திற்கும் அற்புதமான பலன்களை வழங்கும். அவற்றில் லிக்னான்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளிட்டவை இருக்கின்றன. அவை சருமத்தை இறுக்கமாகவும், தோல் தொங்குவதை தடுக்கவும் உதவிகரமாக இருக்கின்றன. ஆளி விதைகள் உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் ஊட்டச்சத்துக்களை ஏற்படுத்துகின்றன. ஆகவே பெண்கள் நிச்சயமாக இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.

செய்முறை: ரெண்டு கப் நீரை எடுத்து அதில் அரை கிண்ணம் ஆளி விதை சேர்க்க வேண்டும். மிதமான தீயில் அதனை கொதிக்க வைத்து மர கரண்டியால் தொடர்ந்து கிளறி விட வேண்டும். கலவை வெள்ளை நுரையுடன் ஒரு ஜெல்லை போல மாறும் சமயத்தில் தீயை அணைக்க வேண்டும். அதனை சற்றேற குறைய 20 அல்லது 30 நிமிடங்கள் குளிர விட வேண்டும்.

ஒரு மெல்லிய காட்டன் துணியை எடுத்துக்கொண்டு அதில் ஆளி விதை கலவையிலிருந்து அந்த ஜெல்லை பிரித்தெடுத்துக் கொள்ளவும் அதனை சுத்தமான காற்று புக முடியாத இடத்தில் சேமித்து வைக்கவும். இந்த ஜெல்லை தங்களுடைய குளிர்சாதன பெட்டியில் ஒரு மாதம் வரையில் சேமித்து வைத்திருக்கலாம். எப்போது வேண்டுமானாலும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஜெல்லை உங்களுடைய முகம் முழுவதும் தடவிக் கொண்டு அரை மணி நேரம் போன பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் உங்களுடைய சருமம் புத்துணர்ச்சியாக இருக்கும்.

Kathir

Next Post

ஆண்களே தங்களுடைய மேனி பராமரிப்புக்கு இந்த தவறுகளை மட்டும் மறந்தும் கூட செய்து விடாதீர்கள்!

Wed Dec 7 , 2022
பெண்கள் எப்படி தங்களுடைய சருமத்தை பாதுகாப்பாகவும் தங்களுடைய மேனியை நாள்தோறும் புது பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அதே போல ஆண்களும் தங்களுடைய மேனியை அழகாகவும், பொலிவுடனும் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் பெண்களை விட தங்களை அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆண்கள் மிகவும் துடிப்புடன் செயல்படுவார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. உதாரணமாக, அனைத்தை இளைஞர்களின் சட்டை பாக்கெட்டிலும் பணம் இருக்கிறதோ, இல்லையோ […]

You May Like