fbpx

என்றும் இளமையாக தெரிய வேண்டுமா? இந்த 5 விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க!

தற்போது இருக்கும்  துரித வாழ்க்கை முறையின் காரணமாக மக்கள் இளம் வயதிலேயே முதுமையை எட்டி விடுகின்றனர். 30 வயதிலேயே தோல் சுருக்கம், இளநரை, ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி என முதுமையில் ஏற்படக்கூடிய எல்லா விஷயங்களும் நடுத்தர வயதிலேயே மக்களுக்கு வந்து விடுகிறது. இவற்றில் இருந்து எவ்வாறு நம்மை காத்து 50 வயதிலும்  இளமையாக தோற்றமளிக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

நமது சருமத்தை பாதுகாத்து பொலிவுடன் வைத்திருப்பதன் மூலம் வயதானாலும் இளமை தோற்றத்துடன் இருக்க உதவுகிறது. முகமே அகத்தின் கண்ணாடி என்பது போல் நம் முகத்தை சூரிய ஒளி மற்றும்  தூசி போன்ற சூழலியல் காரணிகளிலிருந்து பாதுகாத்து வைப்பதன் மூலம் இளமை தோற்றத்தோடு இருக்கலாம்.

அதிகமாக புகை பிடிப்பவர்களுக்கு இளம் வயதிலேயே நரை மற்றும் சுருக்கம் ஏற்பட்டு முகம் பெரிய அளவில் வீங்கி இருக்கும்.மேலும் நிக்கோட்டின் தாக்கம் நம்மை விரைவாக முதிர்ச்சி அடைய செய்து விடுகிறது. நீண்ட காலம் இளமையாக இருக்க வேண்டுமானால்  புகை பிடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

சமச்சீர் உணவு மற்றும் பழங்கள்,காய்கறிகள் ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம்  நமக்கு இளமையான தோற்றம் கொடுக்கும். மேலும் காய்கறிகள் மற்றும் பழங்களில் இருக்கக்கூடிய வைட்டமின்கள் நம் உடலில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மையை எதிர்த்து போராடக் கூடியது.

நீங்கள் அதிகமாக மது அருந்துபவராக இருந்தால் அதனைக் குறைத்துக் கொள்வது நீண்ட நாள் இளமையுடன் இருக்க வழி செய்யும்.ஆல்கஹால் ஆனது இன்னும் சருமத்தில் இருக்கக்கூடிய நீரினை அதிக அளவில் உறிஞ்சி நம் சருமத்தை சிதைவுக்கு உள்ளாக்கும். இதன் காரணமாக இளம் வயதிலேயே முதுமை தோற்றம் கிடைக்கும்.

தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை கொண்டிருந்தால் நமது மனமும்,தோற்றமும்,உடலும் என்றும் இளமையாக இருக்கும். மிதமான மற்றும் கடினமான உடற்பயிற்சிகள் நம் உடலின் இரத்த ஓட்டத்தை தூண்டுகின்றன.இதன் காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எல்லா உறுப்புகளுக்கும் தேவையான ரத்த ஓட்டம் கிடைக்கும் போது அவை நன்றாக செயல்பட்டு நம்மை இளமை தோற்றத்துடன் வைக்க உதவுகிறது.

Baskar

Next Post

அட இது தெரியாம போச்சே...! இந்த ரேஷன் கார்டு இருந்தால் போதும்...! உங்களுக்கு வேலை உறுதி...!

Fri Jan 27 , 2023
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் வேலை வாய்ப்பு திட்டம் குறித்து பார்க்கலாம். இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்கவும் அவர்களை தொழில் முனைவோராக மாற்றவும், அவர்களை வேலை வாய்ப்புகளுக்கு அதிக அளவில் தகுதி உடையோராக மாற்றவும் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.மத்திய ஊரக அமைச்சகத்தின் ‘தீன் தயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்ய யோஜனா என்ற திட்டம், கிராமப்புற […]
பொங்கல் பண்டிகை முதல்..!! குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000..!! வங்கிக் கணக்கு பணிகள் தீவிரம்..!!

You May Like