வீட்டை எப்போதும் நறுமணத்துடன் வைத்துக் கொள்வதற்கு எண்ணற்ற வழிகள் உள்ளன. அதில் பெரும்பாலும் அனைவரும் செய்வது ஒரு கடைகளில விற்கப்படும் ரூம் ஸ்ப்ரேவை வாங்கி பயன்படுத்துவது.
ஆனால் அவ்வாறு அதிகப்படியாக செலவு செய்து, ரூம் ப்ரஷ்னர் அடிப்பதற்கு பதிலாக, இயற்கையான நறுமணத்தை வீட்டில் தங்க வைக்க ஒரு எளிமையான வழி உள்ளது. அது என்னவென்றால், நறுமணக் கலவை ஒன்றைத் தயாரிப்பது.
ஒரு சிறு பானையில் நறுமணமிக்க பொருட்களை உலர வைத்து, அதனை வீட்டின் அறையில் வைத்தால், வீட்டில் உள்ள துர்நாற்றமானது எளிதில் நீக்கப்பட்டு, வீட்டில் நறுமணம் தங்கும். பூக்களில் ரோஜாவில் நல்ல நறுமணம் இருக்கும். ஆகவே அத்தகைய ரோஜாவை சூரிய வெப்பத்தில் நன்கு உலர வைத்து, பின் அதனை ஒரு சிறு பௌலில் போட்டு, அதன் மேல் சிறிது லாவெண்டர் எசன்ஸ் தெளித்து விட்டால், வீடானது நன்கு கமகமக்கும்.
மூலிகைகளில் புதினா மற்றும் எலுமிச்சை புல்லில் நல்ல நறுமணம் வீசும். எனவே இந்த மூலிகைகளை உலர வைத்து, பௌலில் போட்டு வீட்டில் வைக்கலாம். மசாலாப் பொருட்கள் நிறைய பொருட்கள் நல்ல நறுமணத்துடன் இருக்கும். அதிலும் பட்டை, ஏலக்காய் போன்றவற்றை ஒரு பௌலில் போட்டு, அதில் சிறிது கிராம்பு எண்ணெய் தெளித்து, வீட்டின் அறைகளில் வைத்தால், நல்ல வாசனை வீட்டில் இருக்கும்.
உலர் இலைகள் உலர் இலைகளான ரோஸ்மேரி மற்றும் சேஜ் போன்றவற்றில் இயற்கையாகவே நல்ல நறுமணம் உள்ளது. எனவே இத்தகைய இலைகளை உலர வைத்து, அதனை பௌலில் போட்டு வைக்கலாம்.
இஞ்சி ஒரு அருமையான பொருள். இந்த இஞ்சியை துருவி பௌலில் போட்டு, அதில் சிறிது வென்னிலா எசன்ஸ் சேர்த்து வைத்தால், அப்போது வரும் மணமே தனி தான்.
பழங்களின் தோல் பழங்களில் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழத்தின் தோலில் நல்ல வாசனை உள்ளது. எனவே அவற்றின் தோல்களை நறுக்கி, அதனை சிறு பாத்திரத்தில் போட்டு, வீட்டின் ஜன்னல் கதவுகளில் அருகே வைக்க வேண்டும்.
பஞ்சு பஞ்சுகளை நல்ல நறுமணமிக்க எண்ணெயில் நனைத்து, அதனை நன்கு காய வைத்து, அதனை ஒரு பௌலில் போட்டு, அதன் மேல் மீண்டும் சிறு துளி நறுமண எண்ணெய்களை தெளித்து, வீட்டினுள் வைத்தால், இதுவும் வித்தியாசமான நறுமணத்தைக் கொடுக்கும்.
பிரியாணி இலை பிரியாணி இலை உணவிற்கு மட்டுமின்றி, அறையில் நல்ல நறுமணத்தை தக்க வைக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. எனவே இந்த இலைகளை ஒரு பௌலில் போட்டும் வைக்கலாம்.