வயிற்றுப்போக்கு, தூக்கமின்மை, உடல் சூடு, மூலம் உள்ளிட்ட பிரச்சனைகளை சரிசெய்ய கசகசாவில் உள்ள மருத்துவ குணங்கள் பெரிதும் உதவுகிறது . மேலும், இதில் உள்ள பல்வேறு நன்மைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
அசைவ உணவுகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் கசகசாவில் பல்வேறு மருத்துவ பயன்கள் உள்ளது. இது இனிப்புச் சுவையையும் வெப்பத் தன்மையையும் கொண்டது. துவர்ப்புச் சுவையைத் தூண்டும்; உள்உறுப்புகளின் புண்களை ஆற்றும். கசகசா உடலை பலப்படுத்தும்; ஆண்மையைப் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும். கசகசாவை அன்றாட உணவில் சேர்த்துவர, ஆழ்ந்த நித்திரை உண்டாகும்.
பாதாமை ஊறவைத்து தோல் உரித்து அதனுடன் கசகசா சேர்த்து அரைக்க வேண்டும். பிறகு பாலை கொதிக்க வைத்து அதில் அரைத்த விழுதை சேர்த்து மீண்டும் கொதிக்க விட்டு பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவந்தால் ஆண்மையை அதிகரிக்கவு பாலியல் ஆசையை தூண்டவும் உதவுகிறது. கசகசா மற்றும் ஜாதிக்காய் இரண்டையும் சம அளவு அரைத்து தேன் மற்றும் பனங்கற்கண்டு பாகுபோல் காய்ச்சி தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.
பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதை, கசகசாவைச் சம அளவு எடுத்து, இதனுடன் பால் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்து அலசினால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளபளப்பாக மாறும். மேலும் இதை தேங்காய் துவையலுடன் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால், வயிற்றுப்போக்கு குணமாகும். கசகசாவை தூளாக அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுக்கும்