தற்சமயத்தில் பலருக்கு சிறு வயதிலேயே மறதி ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள். இதனை சரிசெய்ய உணவில் தனிப்பட்ட சிறப்பு கவனம் செலுத்தப்படுவது அவசியமாக உள்ளது.
உடலுக்கு மட்டுமின்றி மூளைக்கும் ஆற்றல் தேவைப்படுகிறது. நினைவாற்றலை அதிகரிப்பதற்காக சில உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும். இந்த பதிவில் என்னென்ன உணவுகள் நினைவாற்றலை மேம்படுத்தும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
அன்றாட வாழ்வில் பச்சைக் காய்கறிகள் உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. உடல் வளர்ச்சி என்பது மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. காலிபிளவர், முட்டைகோஸ், ப்ரோக்கோலி உள்பட அனைத்து வகையான கீரைகளையும் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. இது ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரி போன்ற பருப்புகளை உட்கொள்வது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. மூளையை கூர்மைப்படுத்தி மூளையின் வேகத்தை அதிகப்படுத்துகிறது. மேலும் இதனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.