பல்வேறு மாறுபட்ட டயட் கோட்பாடுகள் குழப்பத்தை ஏற்படுத்தலாம். மாதந்தோறும் புதுப் புது கோட்பாடுகளும் அறிமுகமாகிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் உங்களுக்கு ஏற்றது எது என எப்படி கண்டறிவது? வல்லுனர்களின் கருத்துக்களை முன்வைப்பது மூலம் தீர்வைக் காட்டுகிறார் ஃபாயே ரெமிடியாஸ்.
எந்த ஒரு டயட் முறையும் ஆரோக்கியத்திற்கான மந்திர சூத்திரத்தைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் உடலின் தன்மை மற்றும் வயிற்றின் தன்மைக்கு ஏற்பவே முடிவு செய்ய வேண்டும். உங்களை ஆரோக்கியமாகவும், துடிப்பாகவும், திருப்தியாகவும் வைத்திருக்கும் அதே நேரத்தில் உங்கள் சருமம் மற்றும் கூந்தல் நலனையும் காக்கக்கூடிய, உணவு திட்டத்தை வகுக்கக்கூடிய வகையில் பல்வேறு உணவுக் கட்டுப்பாடு கோட்பாடுகளில் உள்ள முக்கிய அம்சங்களை எடுத்துக்கொள்ளலாம்.
வேகன்-உணவுமுறை : பால் பொருட்கள், முட்டை உட்பட அனைத்துவிதமான விலங்குப் பொருட்களையும் தவிர்க்கும் உணவு முறை இது. இவற்றுக்கு பதிலாக பழங்கள், காய்கறிகள், கீரைகள், தானியங்கள், கொட்டை வகைகள் ஆகியவற்றை கொண்டிருக்கிறது. இந்த உணவு முறை, உணவை மட்டும் மனதில் கொள்ளாமல் சுற்றுச்சூழல் நலனையும் கருத்தில் கொள்கிறது. பாலை தவிர்ப்பது போலவே, நீடித்த விவசாயத்திற்கு துணை நிற்பதும், கார்பன் அடிச்சுவட்டை குறைப்பதும் முக்கியம்.
சாதகங்கள்: “வேகன் உணவு கொலஸ்ட்ரால் இல்லாதது, சாச்சுரேட்டட் கொழுப்பு குறைவானது. இது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். இருதய கோளாறு அல்லது புற்றுநோய் போன்றவை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளவர்களுக்கு இந்த உணவு வகை மிகவும் ஏற்றது. மேலும் பழங்கள், காய்கறிகள், பீன்ஸ் போன்றவை ஆண்டிஆக்ஸிடெண்ட் நிறைந்துள்ளன. புகையிலை, கதிரியக்கம் போன்ற நச்சுகளால் உண்டாகும் ஃப்ரீரேடிகல்சின் பாதிப்புகளில் இருந்து செல்களை காக்கும் ஆற்றல் கொண்டவை” என்கிறார் நட்சத்திர ஃபிட்னஸ் பயிற்சியாளர் விநோத் சன்னா.
பாதகங்கள்: இத்தகைய கட்டுப்பாடுமிக்க உணவு முறையை கடைபிடிப்பது எளிதல்ல. ஏனெனில் இவர்கள் எல்லா வகையான விலங்குப்பொருட்கள், துணை பொருட்களை தவிர்க்கின்றனர். தேனும் இதில் அடங்கும். இந்த உணவு முறையை பின்பற்றினால், வெளியே சாப்பிடும் போது உங்கள் மெனுவில் இருந்து தேர்வு செய்வது கடினம். “பெரும்பாலான ஊட்டச்சத்துகளை அளிக்கும் வேகன் பொருட்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை கண்டறிவதுதான் கடினம். உதாரணமாக, இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் டியை எடுத்துக்கொள்வோம். வைட்டமின் டி, வேகன் பொருட்களில் இருந்தாலும் அதை சூரிய ஒளி மூலம்தான் பெற முடியும். இரும்புச்சத்து என்றதும் இறைச்சிதான் நினைவுக்கு வரும். ஆனால் பீன்ஸ் மற்றும் கீரைகளிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுடன் கலந்து சாப்பிடுவதன் மூலம் இரும்புச்சத்தை அதிகம் பெறலாம். இவற்றுடன் உங்களுக்கு வைட்டமின் பி 12 தேவை. இது விலங்கு பொருட்கள் மூலமே கிடைக்கிறது.
ஆரோக்கியமான உணவு என்பது ஏதாவது வகையில் புரதத்தைக் கொண்டிருக்க வேண்டும். வேகன் உணவில், புரதச் சத்தை வழங்கக்கூடிய இறைச்சி, முட்டை தவிர்க்கப்படுவதால், இந்த சத்தை வேறு வழியாக பெற வேண்டும். எனவே வேகன் வழிக்கு மாறுவதாக இருந்தால் சோயா, பீன்ஸ் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இறைச்சிக்கு மாற்று உணவுகள் அதிக அளவு சோடியம் கொண்டு பதப்படுத்தட்டிருக்கலாம்” என்கிறார் சன்னா.
உணவு வகை: க்ளூட்டன் இல்லா உணவு க்ளூட்டன் இல்லா உணவு என்பது கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் இல்லாதது. கோதுமை உணவை செரிக்க முடியாதவர்கள், சிறு குடல் பாதிப்பு கொண்டவர்களுக்கு இது மிகவும் ஏற்றது. கோதுமை அல்லாத, அரிசி, ஓட்ஸ், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை கொண்டது. பதப்படுத்தப்பட்ட பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.
சாதகங்கள்: ஒரு சிலருக்கு க்ளூட்டன் ஒத்துக்கொள்ளாது. இதனால் பாதிப்பு உண்டாகலாம். க்ளூட்டன் சாப்பிடுவதை நிறுத்தினால் இவை சரியாகிவிடும். பதப்படுத்தட்ட உணவுகளில் க்ளூட்டன் அதிகம் இருப்பதாக சன்னா எச்சரிக்கிறார். “க்ளூட்டன் இல்லாத உணவு உட்கொள்ள விரும்பினால், நீங்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைத்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை. ரசாயனம் மற்றும் செயற்கை பொருட்கள் கலப்பு குறையும் என்பதால் இது நல்லதுதான். ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். க்ளூட்டனை விலக்கினால் எடை குறையும். மைகிரேன் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்.” மேலும் குறிப்பிட்ட சில நோய்கள் உண்டாகும் வாய்ப்பும் குறையும். உதாரணமாக, டைப் 2 நீரிழிவு அல்லது அனீமியா உண்டாகும் வாய்ப்பு குறைவு. டைப் 1 நீரிழிவு கொண்டவர்கள்கூட ரொட்டியை தவிர்ப்பது நல்லது. அதோடு இந்த வகை உணவை தவிர்ப்பதால் அதிக அளவில் நல்ல மாவுச்சத்து உணவை சாப்பிட முடியும்.
பாதகங்கள்: க்ளூட்டன் இல்லாத உணவு, குறிப்பிட்ட சில பொருட்களின் சுவையை ஈடு செய்வதற்காக அதிக சர்க்கரை கொண்டதாக இருக்கும். விலையும் கூடுதலாக இருக்கலாம். “இந்திய உணவுகளில் கோதுமை நீக்கமற நிறைந்திருக்கிறது. அதைத் தவிர்ப்பது ரவை போன்றவற்றையும் பயன்படுத்த முடியாத நிலையை உண்டாக்கும். இதனால் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் குறைபாடு உண்டாகலாம்” என்கிறார் ஊட்டச்சத்து வல்லுனர் மற்றும் ஃபிட்னஸ் பயிற்சியாளரான சுமன் அகர்வால். ஃபாலெட் போன்ற ஊட்டச்சத்து குறைவுதான் க்ளூட்டன் இல்லாத உணவில் உள்ள மிகப்பெரிய குறை. பெரும்பாலான மாற்று உணவுகளில் போலெட் அதிகம் கிடையாது.