நமது அன்றாட உணவில் சில பொருட்கள் அளவோடு எடுத்துக்கொண்டால் நன்மை தரும். ஆனால், அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். அப்படிப்பட்ட ஒரு உணவுதான் சைவ உணவு பிரியர்களின் விருப்பமான பன்னீர். இதில் புரதம் மற்றும் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. ஆனால், இதை அதிகமாக உட்கொள்ளும்போது சில எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படலாம்.
ஆரோக்கிய நன்மைகள் :
பன்னீர் எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. மேலும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் பன்னீர் பெரிதும் உதவுகிறது. இதில் கலோரிகளும் கொழுப்பும் குறைவாக இருப்பதால், இது ஒரு சிறந்த உணவு பொருளாக கருதப்படுகிறது. அதிகளவில் சாப்பிட்டால் ஏற்படும் பக்கவிளைவுகள்
எந்த ஒரு உணவையும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஆபத்தானதுதான்.
பன்னீருக்கும் இது பொருந்தும். பன்னீரில் கலோரிகள் குறைவாக இருந்தாலும், அதிகமாக சாப்பிடும்போது கலோரி அளவு அதிகரித்து, உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மேலும், சில வகையான பன்னீரில் கொழுப்பு மற்றும் உப்பு அதிகமாக இருக்கும். அதை அதிகமாக சாப்பிடும்போது உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உண்டு. பன்னீரில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு நல்லது என்றாலும், அதிகப்படியான கால்சியம் உட்கொள்ளல் சிறுநீரகத்தில் கற்கள் உருவாக வழிவகுக்கும்.
சரியான முறையில் பன்னீரை எப்படி சாப்பிடுவது..?
பன்னீரை முழுமையாக தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, அதை அளவோடு சாப்பிடுவது மிகவும் முக்கியம். காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றுடன் சேர்த்து பன்னீரை உட்கொள்ளும்போது அதன் சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைக்கும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, பன்னீரை அளவோடும், சரியான உணவுப் பழக்கத்துடனும் சேர்த்துக்கொள்வது நல்லது.
Read More : “என் பொண்டாட்டியை விட்ருடா”..!! கெஞ்சிய கணவன்..!! விடாத கள்ளக்காதலன்..!! கடைசியில் நடந்த பயங்கரம்..!!