தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான்.. இந்தியாவில் எத்தனையோ உச்ச நடிகர்கள் இன்னும் கோலோச்சி வருகின்றனர்.. ஆனால் 25 வயதை போலவே 75 வயதிலும் ஒரு நடிகர் அதே துள்ளல், ஸ்டைலுடன் வலம் வர முடியும் என்றால் அது நிச்சயம் ரஜினி மட்டுமே.. தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் நடிப்பாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் ரஜினி..
அதுமட்டுமா, இந்த வயதிலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வரிசையாக அதுவும் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.. தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருக்கும் ரஜினிகாந்த் நேற்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார்..
அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.. அவருக்கு நேற்று சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருந்தன…
இந்த நிலையில் தனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.. தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ என்னுடைய பிறந்த நாளில் வாழ்த்துத் தெரிவித்த அருமை நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி திரு கே.பழனிச்சாமி அவர்களுக்கும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள், திரையுலக நண்பர்கள், ஊடகத் துறையினர், மற்றும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான அனைத்து ரசிகப் பெருமக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்..
அதே போல் பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு ஆகியோரு தனித்தனியே நன்றி சொல்லி பதிவிட்டுள்ளார்.
மேலும் நடிகர் கமல்ஹாசனுக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.. அந்த பதிவில் “ என் பிறந்த நாளில் வாழ்த்துத் தெரிவித்த என்னுடைய அருமை நண்பர் திரு கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி..” என்று குறிப்பிட்டுள்ளார்..



