மீண்டும் ஆட்டத்தை தொடங்கும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை மையம் முக்கிய தகவல்..!

Rain 2025

தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று வரும் 18-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது..


இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மறு நாள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 17-ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 18-ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வரும் 19, 20 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. சென்னையை பொறுத்த வரை இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Read More : “அரசியல் நாகரிகம் இல்ல.. ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்கவில்லை எனில்..” கொந்தளித்த செல்வப்பெருந்தகை..!

RUPA

Next Post

பச்சைக் கோழியை ஃப்ரிட்ஜில் எவ்வளவு நேரம் சேமிக்க வேண்டும்? இந்த தவறைச் செய்யாதீர்கள், இல்லையெனில்..

Sat Nov 15 , 2025
பலர் தங்கள் புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கோழிக்கறியை உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். இருப்பினும், இது கெட்டுப்போக வேண்டிய உணவு என்பதால், பாதுகாப்பாக சேமிக்கப்படாவிட்டால் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். உணவுப் பாதுகாப்பு நிபுணர்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய வழிகாட்டுதல்களில், பச்சைக் கோழியை குளிர்சாதன பெட்டியில் எவ்வளவு நேரம் வைக்கலாம், அதை எப்படி சேமிப்பது, என்ன தவறுகள் செய்யக்கூடாது என்பதை அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர். பச்சைக் கோழியில் பாக்டீரியாக்கள் வேகமாக வளரும். […]
Chicken 1

You May Like