அடுத்த 3 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் பேய் மழை வெளுக்கும்.. வந்தது அலர்ட்!

tn rains new

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வடதமிழகம் புதுவை தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று (03-12-2025) காலை 05.30 மணி அளவில், வடதமிழக – புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறைந்தது..


இது, அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுக்குறையக்கூடும். மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.. அதன்படி, அரியலூர், கோவை, கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தென்காசி, தஞ்சை, தேனி, திருவாரூர், திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.. அடுத்த 3 மணி நேரத்திற்கு திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட சென்னை பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Read More : புழல் ஏரி நீர் திறப்பு.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

RUPA

Next Post

ரூ.1 செலவில்லாமல் உங்கள் கணக்கில் ரூ.3 லட்சம் பெறலாம்.. மோடி அரசின் முக்கிய அறிவிப்பு!

Wed Dec 3 , 2025
உலகின் மிகப்பெரிய ஆன்மீக சங்கமமான நாசிக்-திரியம்பகேஷ்வர் கும்பமேளா 2027க்கான லோகோ வடிவமைப்புப் போட்டி தொடங்கியுள்ளது. இந்தப் புனித நிகழ்வின் உணர்வு, நதியின் புனிதம் மற்றும் சிவபெருமானின் சக்தியைப் பிரதிபலிக்கும் ஒரு படைப்பு வடிவமைப்பைக் கொண்ட லோகோவை நீங்கள் உருவாக்கினால், நீங்கள் ரூ. 3 லட்சத்தை வெல்லலாம். இந்தப் போட்டியின் முழு விவரங்கள் குறித்து பார்க்கலாம்.. நாசிக்–திரியம்பகேஷ்வர் கும்பமேளா என்பது உலகின் மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டங்களில் ஒன்றாகும். இது மகாராஷ்டிராவில் உள்ள […]
Pm Modi and money

You May Like