தமிழ்நாட்டில் இன்று 20 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.. கேரளா – கர்நாடகா இடையே இன்று காலை உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவடைந்துள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவித்துள்ளது..
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.. இதன் காரணமாக 21-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும்.. இது மேற்கு – வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வலுப்பெறும்..
இன்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தீபாவளி நாளான 20-ம் தேதி 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தீபாவளி நாளில் கனமழை பெய்யும்..
வரும் 21-ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.. வரும் 22-ம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்..
வரும் 23-ம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர். திருப்பத்தூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். வரும் 24-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : Flash : கரூர் துயரம்.. தவெகவினர் யாரும் தீபாவளி கொண்டாட வேண்டாம்.. விஜய் அறிவுறுத்தல்..



