சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டும்..! 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று..! வானிலை மையம் அலர்ட்..!

rain

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று முன் தினம் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடகிழக்கு இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. ஜனவரி 11, 2026-க்குள் மழைப்பொழிவு படிப்படியாகக் குறையும், இருப்பினும் பரவலாக லேசானது முதல் மிதமான மழை தொடரும், மேலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.


11-01-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

12-01-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

13-01-2026 முதல் 16-01-2026 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

10-01-2026 முதல் 12-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

11-01-2026: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

12-01-2026: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள்:

11-01-2026 சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

12-01-2026 மற்றும் 14-01-2026: எச்சரிக்கை ஏதுமில்லை. ஆழ் கடல் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் இப்பகுதிகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Read More : Flash : இனி மரம் வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்..! சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!

RUPA

Next Post

மதுரோவை போலவே புடினும் அதிரடியாக கைது செய்யப்படுவாரா? டிரம்ப் சொன்ன பதில் இதுதான்..!

Sun Jan 11 , 2026
வெனிசுலா முன்னாள் தலைவர் நிக்கோலஸ் மதுரோவை சமீபத்தில் கைது செய்ததைப் போன்ற ஒரு அதிரடி நடவடிக்கையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளக்கூடும் என்ற யூகங்களை அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், புடின் மீதான அத்தகைய நடவடிக்கை தேவையற்றது என்று கூறினார். மதுரோவுக்குப் பிறகு புடின் அடுத்த இலக்காக இருக்கலாம் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி மறைமுகமாகக் குறிப்பிட்டது குறித்துக் கேட்டபோது, […]
trump putin

You May Like