வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது..
வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நேற்று நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, இன்று காலை வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.. இது மேற்கு திசையில் நோக்கி நகர்ந்து, தெற்கு ஒடிசா, அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில் அடுத்த 2 நாட்களில் கடந்து செல்லக்க்கூடும்.
மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.. மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள்ளது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்.. உதவி எண்களை அறிவித்த தமிழக அரசு!



