தமிழ்நாட்டின் இந்த மாவட்டங்களில் கனமழை பொளந்து கட்டும்..! எந்தெந்த தேதிகளில்? வந்தது அலர்ட்..!

Rain 2025

தமிழ்நாட்டில் இன்று முதல் 12-ம் தேதி வரை மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் “ நேற்று (05-01-2026) தெற்கு பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று மாலை 5.30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது இன்று (06-01-2026) காலை 05.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது.


இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும். பிறகு, மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நகரக்கூடும். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

06-01-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

07-01-2026: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் தமிழகத்தில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

08-01-2026: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

09-01-2026: மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

10-01-2026: கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவைலும் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

11-01-2026: கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : Breaking : கரூர் பெருந்துயரம்.. விஜய்க்கு சிபிஐ சம்மன்..! 12-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு..!

RUPA

Next Post

பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு..! சென்னையில் இருந்து 22,797 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்..!

Tue Jan 6 , 2026
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  சென்னை போன்ற நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.. அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி பொங்கல் கொண்டாடப்படுகிறது.. பொங்கல் பண்டிகையை ஒட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் மக்கள் குடும்பத்தினருடன் கொண்டாட செல்வது வழக்கம். எனவே ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசின் […]
spl bus

You May Like