குதிகால் வெடிப்பு, குறிப்பாக மழைக்காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான மற்றும் அசௌகரியமான பிரச்சனையாகும். இதனால் நடப்பதில் சிரமம், வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த நிலையில், வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய மற்றும் இயற்கை வைத்திய முறைகள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
வெதுவெதுப்பான நீர் : வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் சிறிதளவு ஷவர் ஜெல் சேர்த்து, உங்கள் பாதங்களை 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற வையுங்கள். பின்னர், பியூமிஸ் கல்லை கொண்டு மெதுவாக தேய்த்து இறந்த சருமத்தை நீக்குங்கள். பிறகு, ஒரு நல்ல மாய்ஸ்சரைசரை தடவினால், குதிகால் சருமம் மென்மையாகும்.
தேங்காய் எண்ணெய் : இது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது. தினமும் இரவு தூங்கச் செல்லும் முன் தேங்காய் எண்ணெய்யை குதிகாலில் தடவி மசாஜ் செய்து வந்தால், குதிகால் மென்மையாகவும், வெடிப்புகள் இல்லாமலும் இருக்கும்.
தேன் : இது ஒரு இயற்கையான கிருமி நாசினியாகும். வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து பாதங்களை ஊறவைப்பது அல்லது படுக்கைக்கு முன் தேனை நேரடியாக குதிகாலில் தடவி இரவு முழுவதும் வைப்பது, வெடிப்புகளை குணப்படுத்த உதவும்.
வாழைப்பழம் மற்றும் வெண்ணெய் : பழுத்த வாழைப்பழம் மற்றும் வெண்ணெய்யை ஒன்றாக கலந்து பேஸ்ட்டாக்கி, வெடிப்புள்ள பகுதிகளில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். இது குதிகால் வெடிப்பைக் குணமாக்கும்.
ஓட்ஸ் ஸ்க்ரப் : ஓட்ஸ் ஒரு சிறந்த இயற்கை ஸ்க்ரப்பாக செயல்படும். ஒரு தேக்கரண்டி ஓட்ஸுடன் ஆலிவ் எண்ணெய் கலந்து பேஸ்ட்டாக்கி, குதிகாலில் தடவி மெதுவாக மசாஜ் செய்தால், இறந்த சருமம் நீங்கி, புதிய சருமம் உருவாகும்.
ஜெல்லி மற்றும் எலுமிச்சை சாறு : சில துளிகள் எலுமிச்சை சாற்றுடன், வேஸிலின் ஜெல்லியை கலந்து குதிகாலில் தடவி இரவு முழுவதும் விட்டுவிடுங்கள். எலுமிச்சையில் உள்ள அமிலம் இறந்த சருமத்தை நீக்க உதவும், ஜெல்லி ஈரப்பதத்தை தக்கவைக்கும்.
Read More : Headache | தலைக்கு குளித்தவுடன் தலைவலியா..? அப்படினா இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!!