வந்தாச்சு சூப்பர் திட்டம்..!! இனி பணம் இல்லையென்றாலும் ரயிலில் பயணம் செய்யலாம்..!! IRCTC அறிவிப்பு..!!

இப்போது எல்லாம் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கும் கலாச்சாரம் தாண்டி, ஆன்லைனில் நமக்கு பிடித்த பொருட்களை வீட்டிற்கு ஆர்டர் போட்டுவிடுகிறோம். பொருட்கள் வீட்டுக்கு வந்த பின்னர் அதற்கான பணத்தை செலுத்தினால் போதும் என்ற முறை தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், வெளியூருக்கு டிக்கெட் புக் பண்ணும் போது அப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் எப்படி இருக்கும்..! ஆம், ரயில் டிக்கெட்டையும் பணம் இல்லாமல் முன்கூட்டியே முன்பதிவு செய்துவிட்டு பிறகு காசு கொடுக்கலாம்.


இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) இப்போது தனிப்பட்ட பயன்பாட்டிற்கான கிரெடிட் லைன் செயலியான CASHe உடன் அதிகாரப்பூர்வமாக கைகோர்த்து புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது. அதன்படி, IRCTC Rail Connect பயன்பாட்டில் “இப்போது பயணம் செய்யுங்கள், பின்னர் பணம் செலுத்துங்கள்” (TNPL) என்ற அம்சத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த அம்சம் மூலம் பயணிகள் தங்கள் டிக்கெட் தொகையை EMI-களாக மாற்றி மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் தவணைகளில் செலுத்திக் கொள்ளலாம். இதனால் பயணம் திட்டமிடும்போது பெரிய பட்ஜெட் என்ற பாரம் இருக்காது. பொறுமையாக பயணம் முடித்துவிட்டு பணத்தை செலுத்தலாம்.

இதே போல Paytm செயலியுடன் சேர்ந்து மற்றொரு திட்டத்தையும் கொண்டு வந்துள்ளது. அதில் Paytm பயனர்கள் ‘இப்போதே வாங்குங்கள், பிறகு பணம் செலுத்துங்கள்’ (Buy now, Pay later) என்பதை பயன்படுத்தி முதலில் பயணம் செய்து, பின்னர் பணம் செலுத்தலாம். டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு Paytm போஸ்ட்பெய்ட் அம்சங்களைப் பயன்படுத்த நீங்கள் திட்டமிட்டால், 30 நாட்களுக்கு நீங்கள் ரூ.60,000 வரை வட்டியில்லா கிரெடிட்டைப் பயன்படுத்த முடியும். ஒவ்வொரு பில்லிங் சுழற்சியின் முடிவிலும் பயன்படுத்தப்பட்ட தொகை பில் செய்யப்படும். மேலும், நீங்கள் அதை முழுமையாக செலுத்த வேண்டும்.

Paytm போஸ்ட்பெய்டைப் பயன்படுத்தி IRCTC இல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

* IRCTC போர்ட்டலுக்குச் சென்று உங்கள் கணக்கில் உள்நுழையவும்.

* தேதி மற்றும் சேருமிடம் உட்பட உங்கள் பயண விவரங்களை உள்ளிட வேண்டும்.

* உங்கள் ரயிலைத் தேர்ந்தெடுத்து டிக்கெட்டை முன்பதிவு செய்யவும்.

* கட்டணப் பிரிவின் கீழ் “பின்னர் பணம் செலுத்து” என்பதை தேர்வு செய்து, “Paytm போஸ்ட்பெய்டு” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

* உங்கள் Paytm அக்கவுண்ட் விவரங்களைப் பயன்படுத்தி உள்நுழைந்து OTP ஐ உள்ளிடவும். உங்கள் முன்பதிவு நிறைவடையும்.

CHELLA

Next Post

நாளை பிற்பகல் 3.30 மணிக்கு சித்தராமையா பதவியேற்பு..! ஆனால் சிவகுமாரும் முதல்வர்..!

Wed May 17 , 2023
224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்று 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் காங்கிரஸ் 135 தொகுதிகள் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஆனால் அங்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் இடையே முதல்வர் பதவிக்கான போட்டி நிலவிவருகிறது. கடந்த14-ம் தேதி பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், புதிய முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் தேசிய […]
siddaramaiah vs dk shivakumar

You May Like