பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் – ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா ஆகியோரின் உறவு தொடர்பான சர்ச்சை கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பரபரப்பை கிளப்பி வருகின்றன. ரங்கராஜ் தனது முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யாமல், தன்னுடன் 2 ஆண்டுகள் உறவில் இருந்ததாகவும், தான் இப்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் தன்னை மாதம்பட்டி தவிர்ப்பதாகவும், ஜாய் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் மாதம்பட்டி ரங்கராஜு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளித்த அவர் தொடர்ந்து அவருடன் இருந்த வீடியோக்கள் போட்டோக்களையும் பதிவிட்டு விமர்சித்து வருகிறார்..
இந்த சூழலில் தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும், சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்ட வீடியோக்களை நீக்கக் கோரியும் மாதம் ரங்கராஜ் சென்ன உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்..
இந்த விவகாரம் தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா இடையே மத்தியஸ்தம் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி பி.எம். பிரகாஷை நியமித்துள்ளது..
இந்த வழக்கு விசாரணையின் போது தனது குழந்தையின் மாதம்பட்டி ரங்கராஜ் என நிரூபிக்க ஜாய் கிரிசில்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. அப்போது மரபணு சோதனைக்கு தயார் என மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பிலும் கூறப்பட்டது.. இதையடுத்து இதனை மனுவாக தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் தெரிவித்தது..
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி செந்தில்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, ஜாய் கிரிசல்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் மரபணு சோதனை நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது..
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்… சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மரபணு பரிசோதனை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் வழக்கறிஞர் ஆணையரை நியமித்து நீதிபதி உத்தரவிட்டார்.. மரபணு பரிசோதனை அறிக்கையை மத்தியஸ்தரிடம் சமர்ப்பிக்க வழக்கறிஞர் ஆணையருக்கு உத்தரவிட்டார்.. மேலும் வழக்கின் விசாரணையை மார்ச் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதி உத்தரவிட்டார்..
Read More : தவெக ஆட்சிக்கு வந்தால் பயிர் கடன் ரத்து.. விஜய் அளித்த வாக்குறுதிகள் என்னென்ன..?



