தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் (TNSTC) அடுத்தடுத்து விபத்துகளை சந்தித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்னால் ஒரே நாளில் நடந்த இரு வேறு விபத்துகளில் சிக்கி 14 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் அரசு பேருந்தின் டயர் எதிர்பாராத விதமாக வெடித்ததில் 9 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்து தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் தாஹா அலி என்பவரை போலீசார் கைது செய்திருப்பது தற்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. தமிழக அரசு தனது நிர்வாக தோல்வியையும், பேருந்துகளை சரியாக பராமரிக்காத அவலத்தையும் மூடிமறைக்க, அப்பாவி ஓட்டுநரை பலிக்கடா ஆக்குவதாக எதிர்க்கட்சிகளான அதிமுக மற்றும் பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
விபத்துக்கு காரணம் இயந்திர கோளாறு மற்றும் மோசமான பராமரிப்புதான் என்று சுட்டிக்காட்டும் அரசியல் தலைவர்கள், ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுப்பதை விடுத்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் சம்பந்தப்பட்ட பணிமனை மேலாளர்கள் மீதுதான் காவல்துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
Read More : இன்றைய ராசி பலன் 26 டிசம்பர் 2025: எதிரி பிரச்சனைகள் நீங்கும்.. வருமானம் இரட்டிப்பாக இருக்கும்!



