நேருவின் அதிகாரப்பூர்வ இல்லம் ரூ.1100 கோடிக்கு விற்பனை.. ரியல் எஸ்டேட்டை திகைத்த வைத்த ஒப்பந்தம்.. வாங்கியது யார் தெரியுமா..?

Nehru

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அதிகாரப்பூர்வ இல்லம் ரூ.1100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நேருவின் அரசியல் வாழ்க்கையின் தொடக்க கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த இல்லம், மிகப்பெரிய வரலாற்று மற்றும் அரசியல் முக்கியத்துவம் கொண்டது. 17 மோதிலால் நேரு மார்க் (முன்னர் யார்க் சாலை) பகுதியில் அமைந்துள்ள இந்த வீடு, 14,973 சதுர மீட்டர் (சுமார் 3.7 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ளது.

ஆரம்பத்தில் ரூ.1,400 கோடிக்கு பட்டியலிடப்பட்டது. ஆனால், நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இறுதியாக ரூ.1,100 கோடிக்கு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இந்திய பானத் துறையைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர் ஒருவர் இந்த பங்களாவை கையகப்படுத்தியுள்ளார்.

இந்த பங்களா, ராஜஸ்தானைச் சேர்ந்த அரச குடும்பத்தின் வாரிசுகளான ராஜ்குமாரி கக்கர் மற்றும் பினா ராணி ஆகியோரின் சொந்தமாக இருந்தது. வாங்குபவர்களின் சார்பாகச் செயல்பட்ட ஒரு பிரபலமான சட்ட நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டு, “இந்த சொத்துக்கு வேறு யாருக்காவது உரிமை கோரல் இருந்தால், ஏழு நாட்களில் ஆவணங்களுடன் தெரிவிக்க வேண்டும்” என குறிப்பிட்டது.

இந்த ஒப்பந்தம், முந்தைய எல்லா சொகுசு ரியல் எஸ்டேட் விற்பனைகளையும் முறியடித்து, இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய குடியிருப்பு விற்பனையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் நடந்திருந்த பெரிய வீடுகளின் விற்பனைகளையும் இது கடந்துவிட்டது.

LBZ மண்டலத்தின் தனிச்சிறப்பு:

* LBZ என்பது 1912 – 1930 காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது எட்வின் லுட்யன்ஸ் வடிவமைத்த பகுதி.

* சுமார் 28 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.

* மொத்தம் 3,000 பங்களாக்கள் உள்ளன.

* இதில் பெரும்பாலானவை அரசியல்வாதிகள், நீதிபதிகள், மூத்த அதிகாரிகள், தூதர்கள் வசிப்பிடமாக உள்ளன.

* சுமார் 600 பங்களாக்கள் மட்டுமே தனியாருக்குச் சொந்தமானவை. அவையும் பெரும்பாலும் தொழிலதிபர்கள், அரச குடும்பங்கள் மற்றும் பெரிய வணிகக் குடும்பங்களின் வசம் உள்ளன.

இந்த பங்களா வெறும் நிலத்தின் மதிப்பல்ல, அது இந்தியாவின் அரசியல் வரலாற்றின் சின்னம். அதேசமயம், நாட்டின் மிகப்பெரிய பொருளாதார சக்தி வாய்ந்த குடும்பங்களின் வசம் செல்லும் முக்கிய சொத்து என ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Read more: “என் அம்மாவின் மரணம் பொழுதுபோக்காக மாறியது.. மோசமா பேசுனாங்க” மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் வேதனை!

English Summary

Historic Nehru bungalow in Lutyens’ Delhi sold for record ₹1,100 Crore

Next Post

தேர்தல் நெருங்குது.. இது நல்லது இல்ல.. தமிழக பாஜக நிர்வாரிகளுக்கு அமித்ஷா அட்வைஸ்.. டெல்லி மீட்டிங்கில் அண்ணாமலை மிஸ்ஸிங்!

Wed Sep 3 , 2025
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. ஒருபுறம் திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், பாஜக உடன் கை கோர்த்துள்ளது அதிமுக.. மேலும் சீமானின் நாம் தமிழர், விஜய்யின் தவெக ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளதால் தமிழ்நாட்டில் 4 முனைப் போட்டி நிலவுகிறது.. இந்த சூழலில் தமிழ்நாட்டில் எப்படியாவது இந்த முறை […]
amithshan tn bjp

You May Like