நாளை (ஜூலை 7 ஆம் தேதி) திங்கட்கிழமை தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என பரவிய தகவல் வதந்தி என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ தகவல் சரிபார்ப்பகமானது தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “மொகரம் மாத பிறை காயல்பட்டினத்தில் கடந்த ஜூன் 26-ஆம் தேதி (26.6.2025) காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஷரியத் முறைப்படி மொகரம் மாதத்தின் முதல் நாள் ஜூன் 27-ஆம் தேதி என தலைமை காஜி அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் யொமே ஷஹாதத் (மொகரம் பண்டிகை நாள்) ஞாயிற்றுக்கிழமை ஜூலை 6-ஆம் தேதி (6.7.2025) என அறிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
அந்த தினம் ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஜூலை 7-ஆம் தேதி அரசு விடுமுறை வழங்கப்படவில்லை. எனவே “ஜூலை 7 அரசு விடுமுறை” என்று கூறப்படும் தகவல் தவறானது என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். மேலும், பொது மக்களும் ஊடகங்களும் தவறான தகவல்களை பகிர வேண்டாம் என்றும், தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
Read more: கர்ப்பிணிகள் சிக்கன் சாப்பிட்டால் நல்லது தான்.. ஆனால் இவர்களெல்லாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும்..!!