முன்னாள் ராணுவ வீரர்கள் பங்களிப்பு சுகாதார திட்ட பயனாளிகளுக்கு மருந்து விநியோக சேவைகளை அஞ்சல்துறை தொடங்கியுள்ளது.
முன்னாள் ராணுவத்தினர் பங்களிப்பு சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படும் மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகளை பெற்று வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யும் பிரத்யேக சேவையை முன்னாள் ராணுவ வீரர்கள் துறையுடன் இணைந்து அஞ்சல்துறை தொடங்கியுள்ளது.இந்த முன்முயற்சி திட்டத்தின் கீழ் கிராம நிலையிலான தொழில்முனைவோரின் பொதுச்சேவை மையங்கள் மூலமாக மருந்துகளை கொள்முதல் மற்றும் பேக்கேஜ் செய்து இந்தியா போஸ்ட் மூலம் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வீடுதேடி விநியோகம் செய்யப்படும்.
இந்த நடைமுறை நாடுமுழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் முன்னாள் ராணுவ வீரர்கள் பங்களிப்பு சுகாதார திட்டப் பயனாளிகளுக்கு பாதுகாப்புடன் மருந்துகள் சென்றடைவதை உறுதிசெய்யும்.ஏற்கனவே 2025 ஜூலை 31 அன்று தில்லியில் பரீட்சார்த்தமாக தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2025 அக்டோபர் 17 முதல் நாடு முழுவதும் இந்த சேவை வழங்கப்படுகிறது.



