தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே உள்ள சி.ஆர்.காலனியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் சுதந்திரகுமார் (43) சாலையில் ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலைப் பூர்வீகமாக கொண்ட சுதந்திரகுமார், திருப்பூரில் தனியார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக விடுப்பு எடுத்து கழுகுமலையில் உள்ள பெற்றோரின் வீட்டில் தங்கிப் படித்து வந்துள்ளார். கொலை நடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் பைக்கும் மது பாட்டில்களும் கண்டெடுக்கப்பட்டதால், ஆரம்பத்தில் போதையில் நடந்த கொலை என்று போலீசார் சந்தேகித்தனர்.
இருப்பினும், ஆசிரியரின் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்ததில், நாலாட்டின்புத்தூர் அருகே ஆவுடையம்மாள்புரத்தைச் சேர்ந்த சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளியான அஜித்குமார் (28) மற்றும் ஒரு 17 வயது சிறுவன் ஆகிய இருவருடனும் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் இருவரையும் பிடித்து விசாரித்ததில், ஓரினச்சேர்க்கை செயலி மூலம் சுதந்திரகுமாருக்கு இருவருடனும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று, கரடிகுளத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள காமாட்சிபுரம் கண்மாய் பகுதியில் மூவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டபோது அவர்களுக்குள் கடும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, ஆத்திரமடைந்த அஜித் குமாரும், சிறுவனும் சேர்ந்து ஆசிரியர் சுதந்திரகுமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். கொலைக்குப் பிறகு பதற்றத்தில் பைக்கை அங்கேயே விட்டுச் சென்றதால் இருவரும் எளிதில் சிக்கிக் கொண்டனர். கைது செய்யப்பட்ட அஜித் குமார் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More : நாளை முதல் ரூல்ஸ் மாறுது..!! இனி புதிய வாகனங்களை RTO அலுவலகத்திற்கு கொண்டு செல்ல தேவையில்லை..!!



