ஆணவக் கொலை வழக்கில் தனது தந்தை கைது செய்யப்பட்ட நிலையில் கவினின் காதலி சுபாஷினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்..
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தை சேர்ந்த 25 வயதான கவின் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். நெல்லை, பாளையங்கோட்டை, கேடிசி நகரை சேர்ந்த சித்த மருத்துவரான சுபாஷினியும் கவினும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் சகோதரன் சுஜித், கவினை வெட்டி கொலை செய்தார்..
இந்த ஆணவக் கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.. மேலும் சுர்ஜித் காவல்நிலையத்திலும் சரணடைந்தார்.. கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.. மேலும் முதல் தகவல் அறிக்கையில் சுர்ஜித்தின் பெற்றோரும், காவல் உதவி ஆய்வாளர்களான சரவணன், கிருஷ்ணகுமாரின் பெயர்களும் சேர்க்கப்பட்டது.. அவர்கள் இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது..
இந்த வழக்கில் இன்று சிபிசிஐடி விசாரணையை தொடங்கி உள்ளது.. இந்த நிலையில் சுர்ஜித்தின் தந்தை இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.. அவரின் தாயாரையும் கைது செய்ய வேண்டும் என்று கவின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்..
ஆணவக் கொலை வழக்கில் தனது தந்தை கைது செய்யப்பட்ட நிலையில் கவினின் காதலி சுபாஷினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “ நானும் கவினும் உண்மையாக காதலித்து வந்தோம்.. கொஞ்சம் செட்டில் ஆக டைம் தேவைப்பட்டது.. மே 30-ம் தேதி கவினும் சுர்ஜித்தும் பேசினார்கள்.. அப்போதே சுர்ஜித் அப்பாவிடம் சொல்லிவிட்டான்.. அப்பா என்னிடம் லவ் பண்றீயா என கேட்டபோது இல்லை என்று கூறிவிட்டேன்.. ஏனெனில் நான் இன்னும் வாழ்க்கையில் செட்டில் ஆகவில்லை என்று கூறி கவின் 6 மாதம் அவகாசம் கேட்டிருந்தான்.. அதனால் அன்று நான் அப்பாவிடம் சொல்லவில்லை..
கவினுக்கு போன் செய்து, பெண் கேட்க வருமாறு சுர்ஜித் அழைத்தான்.. அது எனக்கு கண்டிப்பாக தெரியுமா.. 27-ம் தேதி கவின் வருகிறான் என்பது எனக்கு தெரியாது.. அன்று மதியம் வந்த பின்னர் தான் எனக்கு கவின் வந்ததே தெரியும்.. ஆனால் கவின் அம்மா, மாமாவிடம் மட்டும் தான் நான் பேசிட்டு இருந்தேன்.. அப்போது கவினை காணவில்லை என்று அவன் அம்மான் போன் செய்தார்.. அப்போது கவின் எடுக்கவில்லை.. நான் போன் செய்த போதும் எடுக்கவில்லை.. அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு.. உண்மை தெரியாமல் யாரும் இதுகுறித்து வதந்தி பரப்ப வேண்டாம்.. என் அப்பா, அம்மாவுக்கு இதில் எந்த சம்மந்தமு இல்லை.. அவர்களுக்கு தெரியாது.. இதை இதோடு விட்டுவிடுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்..
Read More : பிரபல பாடகர் மீது பாலியல் புகார்.. திருமண ஆசை காட்டி பலமுறை உல்லாசம்..!! – பெண் மருத்துவர் குற்றசாட்டு