தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை மாதம் 574 கெளரவ விரிவுரையாளர்கள் நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் 516 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில், மீண்டும் 881 கெளரவ விரிவுரையாளர்களை நியமிக்க உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கல்வி தடையில்லாமல் மாணவர்கள் கற்க வைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த கல்வி ஆண்டில், 15,000 கூடுதல் இடங்கள் மற்றும் புதிய பாடப்பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதற்காக அரசு கல்லூரிகளில் 20% இடங்கள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15% இடங்கள், தனியார் கல்லூரிகளில் 10% இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, 15 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கியுள்ளன. மாணவர்களுக்கு கல்வி தடையில்லாமல் கற்க உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். ஆனால் தேர்வு தாமதம் காரணமாக, தற்காலிகமாக கெளரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாடப்பிரிவுகள் மற்றும் பணியிடங்கள்:
* மொத்தம் 38 பாடப்பிரிவுகளில் 881 பணியிடங்கள்
முக்கியமாக: பிபிஏ – 71, வேதியியல் – 68, பொது வணிகம் – 58, கணினி அறிவியல் – 66, பொருளாதாரம் – 70, தமிழ் – 49, தாவரவியல் – 44
மாவட்ட வாரியாக: தர்மபுரி – 79, ராமநாதபுரம் – 50, நாமக்கல் – 41, ஈரோடு – 45, சென்னை – 40, விழுப்புரம் – 43
இவ்வாறு, மாணவர்கள் கல்வி தொடர, தற்காலிக விரிவுரையாளர்கள் மூலம் பணியிடங்கள் நிரப்பப்பட்டு கற்றல் செயல்பாடுகள் தடைப்படாமல் நடைபெறும் என அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
தகுதிகள்:
- விண்ணப்பதார்கள் அதிகபடியாக 37 வயது வரை இருக்கலாம்.
- அந்தந்த பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்புடன் NET/SLET/SET ஆகிய தகுதித் தேர்வில் உதவி பேராசிரியராக தகுதிப் பெற்றிருக்க வேண்டும் அல்லது Ph.D முடித்திருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.25,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதார்களின் கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு அடைப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://www.tngasa.org/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 08.10.2025 ஆகும்.
Read more: தவெக தொடர்ந்த வழக்கு.. விதிகள் வகுக்க அக்.16 வரை அரசுக்கு அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம்..!