மீண்டும் கோரத்தாண்டவம்..!! ஒரே நாளில் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு..!! மக்களே கவனம்..!!

நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,038 பதிவான நிலையில், இன்று 4,435 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 21,179-இல் இருந்து 23,091 ஆக பதிவாகியுள்ளதாகவும், இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,916 ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,79,712 ஆக பதிவாகியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 220,66,16,373 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,979 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வருவதால், மக்கள் அதிக கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டுமெனவும், தொற்றுக்கான அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டுமெனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

காதலில் விழுந்த மாணவி..!! காமுகனால் கைக்குழந்தையோடு காப்பகத்தில் தவிக்கும் பரிதாபம்..!!

Wed Apr 5 , 2023
இன்ஸ்டாகிராமில் பொழுதை கழித்த 10ஆம் வகுப்பு மாணவி விபரீத காதலில் விழுந்ததால், காமுகனால் சீரழிக்கப்பட்டு வெளிமாநிலத்தில் கைக்குழந்தையோடு காப்பகத்தில் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பள்ளிச்செல்லும் சிறுமிக்கு ஸ்மார்ட் போன் வாங்கிக்கொடுத்ததால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. கன்னியாகுமரி மாவட்டம் இரணியலைச் சேர்ந்தவர் வைகுண்ட அருள். இவர், ஸ்டைலான செல்பி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அப்போது, இன்ஸ்டாகிராமில் 10ஆம் வகுப்பு படித்து வந்த […]
Love

You May Like