தமிழகத்தில் சமீபத்தில் அரசுப் பேருந்துகள் விபத்துகளில் சிக்கி வரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அரசு பேருந்து விபத்துகளில் சிக்கி பலர் உயிரிழந்தும் வருகின்றனர்.. இதையடுத்து அரசு பேருந்துகள் அடிக்கடி விபத்தில் சிக்கியதை தொடர்ந்து விபத்துகளை தடுக்கும் வகையில் பராமரிப்பை மேம்படுத்த உத்தரவிட்டுள்ளது.. நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் அரசு பேருந்துகளை ஓட்டுநர்கள் இயக்குகிறார்களா? என்பதை கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது..
இந்த நிலையில் சேலம் அருகே அரசுப் பேருந்து கவிந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகி உள்ளது.. கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து அரியானூர் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.. சரக்கு வாகனம் மற்றும் இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து தடுப்பின் மீது ஏறி எதிர்புற சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வரைந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும் இந்த விபத்தில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை..
Read More : திடீர் ட்விஸ்ட்..! திமுக கூட்டணியில் இருந்து மா.கம்யூனிஸ்ட் வெளியேறுகிறதா..? பரபரப்பு தகவல்..!



