இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) கிட்டத்தட்ட 300 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் கப்பல் கடலில் தீப்பிடித்து எரிந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர். 280க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலாவுட் தீவுகளில் இருந்து புறப்பட்ட கிரிகோரியஸ் பார்சிலோனா என்ற சொகுசு கப்ப
கிட்டத்தட்ட 300 பேரை ஏற்றிக்கொண்டு மனாடோ நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் தலிஸ் அருகே திடீரென கப்பல் தீப்பிடித்தது. இதனால் அலறியடித்த பயணிகள், தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ளும் வகையில் கப்பலில் இருந்து நடுக்கடலில் குதித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புப் படையினர், பேரிடர் கால மீட்புக்குழுவினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து காரணமாக கப்பலில் எழுந்த புகை புகை விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது. இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 284 பேர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. விபத்து குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
இந்தோனேசியா 17,000க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டமாகும், அங்கு படகுகள் ஒரு பொதுவான பயண முறையாகும். பேரழிவுகள் தொடர்ந்து நிகழ்கின்றன, பலவீனமான பாதுகாப்பு நடவடிக்கையே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
Readmore: குடும்ப வன்முறையால் மேலும் ஒரு பெண் தற்கொலை.. விசாரணையில் பகீர்..!!