ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில், மதுரவாடா பகுதியில் உள்ள ஸ்ரீ தனுஷ் பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவனின் கையை உடைத்ததாக ஒரு ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆசிரியர் இரும்பு மேசையால் மாணவனை கொடூரமாக தாக்கியதில்.. அவரின் கை உடைந்துள்ளது.. மேலும் மாணவனின் கையில் பல எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சிறுவனின் கை மூன்று இடங்களில் உடைந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். அவர் மெடிகவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மோகன் என்ற சமூக அறிவியல் ஆசிரியர் இந்த கொடூர தாக்குதலை நடத்தியவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது தலைமறைவாக உள்ளார், மேலும் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்..
இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கோபத்தை தூண்டியுள்ளது, அவர்கள் பள்ளியில் போராட்டம் நடத்தத் தயாராகி வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
இதனிடையே கேரளாவின் காசர்கோட்டில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் நடந்த மற்றொரு சம்பவத்தில், 10 ஆம் வகுப்பு மாணவர் பள்ளித் தலைமை ஆசிரியரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.. இதில் அந்த மாணவனுக்கு காது குழாய் உடைந்தது.. இந்த சம்பவம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி குண்டம்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. சிறுவனின் குடும்பத்தினரின் கூற்றுப்படி, சம்பவத்தை நேரில் பார்த்த அவரது தங்கை தொடர்ந்து அழுத நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.. இதன் மூலம் என்ன நடந்தது என்பது குடும்பத்தினருக்குத் தெரியவந்தது.
கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி, புகாரை விசாரிக்க கல்வி துணை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார். “குழந்தையின் தாய் தொலைபேசியில் என்னிடம் கூறியது என்னவென்றால், காலை அசெம்பிளி நடந்து கொண்டிருந்தபோது குழந்தை தனது கால்களால் சரளைக் கற்களை நகர்த்தி உள்ளார்.. இதற்காக அவரை அறைந்தனர். குழந்தையின் காதுகுழல் கிழிந்ததாக தாய் கூறினார். மாணவர்களை உடல் ரீதியாக காயப்படுத்த முடியாது என்று ஆசிரியர்களிடம் கூறியுள்ளேன்,” என்று மேலும் கூறினார்.
Read More : 15 பேர் பலி.. சட்டவிரோத கட்டடம் இடிந்து விழுந்து பெரும் விபத்து.. மீட்பு பணிகள் தீவிரம்..!!