நம்மில் அனைவரது வீடுகளிலுமே குறிப்பாக குளியலறை மற்றும் சமையலறை போன்ற இடங்களில் பல்லிகள் அடிக்கடி காணப்படுவது சாதாரணம். ஆனால், அவை எண்ணெய் பாட்டில்கள் மேல் ஓடுவது, ஜன்னல்களில் ஒளிந்து கொள்வது, சுவற்றில் அங்கும் இங்கும் ஓடுவது போன்ற சூழ்நிலைகள் நமக்குள் ஒரு அசௌகரிய உணர்வை உருவாக்கும்.
பலர் இதற்காக பூச்சிக்கொல்லி ஸ்பிரே வாங்கி பயன்படுத்துவார்கள் அல்லது குச்சியால் விரட்ட முயற்சிப்பார்கள். ஆனால், இவை நிரந்தர தீர்வுகளாக இருக்காது. அதுமட்டுமின்றி, சில ரசாயனங்கள் நமது உடல்நலத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இயற்கையான முறையில் பல்லியை விரட்டும் ஸ்பிரேவை எப்படி வீட்டிலேயே தயாரிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
2 பூண்டு பற்கள்
1 சிறிய வெங்காயம்
10 கருப்பு மிளகு
4–5 கிராம்பு
அரை கிளாஸ் தண்ணீர்
1 ஸ்பூன் டெட்டால் (விருப்பத்திற்கேற்ப)
செய்முறை :
* வெங்காயம், பூண்டு, மிளகு, கிராம்பு ஆகியவற்றை அரை கிளாஸ் தண்ணீருடன் மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும்.
* பிறகு, அதை வடிகட்டி, சாறு மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இதில் டெட்டால் சேர்த்து நன்கு கலக்கவும்.
* இப்போது இந்த கரைசலை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி பல்லி இருக்கும் இடத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பல்லிகள் அடிக்கடி வரக்கூடிய இடங்களில் இந்த ஸ்பிரேவை தெளிக்க வேண்டும். வெங்காயம், பூண்டு, மிளகு போன்றவற்றின் தீவிர வாசனை பல்லிகளை அருகே வர விடாது. இந்த இயற்கை தீர்வை வாரத்தில் 2 முதல் 3 முறை தெளிக்க ஆரம்பித்தால், பல்லிகள் உங்கள் வீட்டை விட்டுப் போகும். எந்தவொரு வேதியியல் தாக்கமும் இல்லாமல், பாதுகாப்பான முறையில் இந்த சிக்கலை சமாளிக்க முடியும்.
Read More : கோயிலில் சாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா..? எப்படி வேண்டுதல் வைக்க வேண்டும்..? இது பலருக்கும் தெரியாது..!!