இல்லத்தரசிகள் ஷாக்..!! தடாலடியாக உயர்ந்த தக்காளி விலை..!! ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..? மற்ற காய்கறிகளின் நிலவரம் இதோ..!!

Vegetable Market

சமையலில் அத்தியாவசியப் பொருட்களாக இருக்கும் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை நிலவரம் தான் நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் மாத பட்ஜெட்டை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ரசம் முதல் பிரியாணி வரை அனைத்து உணவுகளிலும் இவற்றுக்கு முக்கிய இடம் இருப்பதால், காய்கறி சந்தைக்குச் செல்வோர் மற்ற பொருட்களை வாங்கினாலும் இந்த இரண்டையும் அதிக அளவில் வாங்குவது வழக்கம்.


இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக குறைந்திருந்த தக்காளி விலை, தற்போது மீண்டும் உயரத் தொடங்கியிருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த வாரம், ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டுமே விற்பனையானது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள தொடர் மழையின் காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.35 முதல் ரூ.45 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில், இதன் விலை ஒரு கிலோவுக்கு ரூ.50-ஐ தாண்டியுள்ளது.

அதேசமயம், வெங்காயத்தின் வரத்து சந்தையில் அதிக அளவில் இருப்பதால், அதன் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போது, 100 ரூபாய்க்கு 6 முதல் 7 கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோயம்பேடு சந்தை விலை நிலவரம் :

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய நிலவரப்படி, பெரிய வெங்காயம் கிலோ ரூ.20, சின்ன வெங்காயம் கிலோ ரூ.45, தக்காளி கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரையிலும், குடைமிளகாய் கிலோ ரூ.40, பாகற்காய் கிலோ ரூ.30, பச்சை மிளகாய் கிலோ ரூ.40, பீட்ரூட் கிலோ ரூ.40, சுரைக்காய் கிலோ ரூ.35, அவரைக்காய் கிலோ ரூ.50, இஞ்சி கிலோ ரூ.80, வெண்டைக்காய் கிலோ ரூ.20, முட்டைக்கோஸ் கிலோ ரூ.15, கேரட் கிலோ ரூ.60-க்கு விற்பனையாகிறது.

அதேபோல் காலிஃப்ளவர் கிலோ ரூ.15, புடலங்காய் கிலோ ரூ.30 கொத்தவரை கிலோ ரூ.50, முருங்கைக்காய் கிலோ ரூ.70, கத்திரிக்காய் கிலோ ரூ.35, பீன்ஸ் கிலோ ரூ.45, முள்ளங்கி கிலோ ரூ.20, பீர்க்கங்காய் கிலோ ரூ.55, உருளைக்கிழங்கு கிலோ ரூ.40, வாழைப்பூ கிலோ ரூ.15 என்ற விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

Read More : விண்ணப்பித்த அனைவருக்கும் ரூ.1,000 உறுதி..!! ஒப்புதல் வழங்கிய நிதித்துறை..!! ஆனால் ஒரு ட்விஸ்ட்..!!

CHELLA

Next Post

அந்தர் பல்டி அடிக்கும் விஜய்..!! ஜனநாயகன் படத்தால் சிதைய போகும் தவெக..!! ரிலீஸுக்கு பின் கட்சி கலைப்பு..?

Sat Oct 25 , 2025
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஜய் நேரில் ஆறுதல் கூறாதது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தொடர்புகொண்டு விஜய் ஆறுதல் தெரிவித்தார். விரைவில் நேரில் சந்திப்பதாகவும் அவர் அப்போது உறுதியளித்தார். இந்த சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து, ஒரு தனியார் அரங்கில் வைத்து சந்திக்க […]
Vijay 2025 1

You May Like