வீட்டில் பயன்படுத்தும் ஸ்டீல் கடாய்கள், பானைகள் போன்ற பாத்திரங்களில் சில நேரங்களில் அடியில் கறைகள் படிந்துவிடுகிறது. அடிப்பிடித்த பாத்திரங்களோடு போராடுவதை விட்டு விட்டு வேறு வேலை இருந்தால் பார்க்கலாம் என அதனை கண்டுக்கொள்ளாமல் விடுபவர்கள் ஏராளம்.
சிலருக்கு என்ன செய்து பார்த்தாலும் அந்தக் கறைகள் நீங்காதது போல தோன்றுகிறது. இதனால் ஏற்படும் டென்ஷனை குறைக்க என்ன எளிதான தீர்வு என யோசிக்கிறீர்களா?… இதோ பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தி இதனை எளிதாக பளபளப்பான பாத்திரமாக மாற்றலாம்.
எலுமிச்சை பழம் கொண்டு சுத்தம் செய்யும் முறை:
தேவையான பொருட்கள்:
- பொடி உப்பு – 1 ஸ்பூன்
- பேக்கிங் சோடா – 1 ஸ்பூன்
- எலுமிச்சை பழம் – பாதி
பாத்திரங்களை சுத்தம் செய்யும் முறை:
* கறைகள் படிந்த பாத்திரத்தின் மேல் ஒரு ஸ்பூன் உப்பை தூவி விடவும்.
* அதன் மேல் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்க்கவும்.
* இப்போது, பாதி எலுமிச்சை பழத்தை எடுத்து, உப்பு மற்றும் சோடா கலந்த பகுதியின் மேல் நன்றாக தேய்க்கவும்.
* எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் சோடா ஒன்றாக கலந்தால், அடியில் படிந்த கறைகள் நெகிழ்ந்து விடும்.
* சில நிமிடங்கள் தேய்ந்ததும், பாத்திரம் புதியது போல மின்னும் என்பதை நீங்களே காணலாம்.
தக்காளி கெச்சப்:
- பாத்திரத்தில் தேவையான அளவு கெச்அப்பை (tomato ketchup) சேர்க்கவும்.
- இரவு முழுவதும் பாத்திரத்தில் ஊற வைக்கவும்.
- மறுநாள் காலையில் பாத்திரத்தை எடுத்து நன்றாக கழுவவும்.
- தக்காளி அமிலத்தன்மை கொண்டது.
- அதில் உள்ள ப்ளீச்சிங் (bleaching) பண்புகள் கறைகள் மற்றும் கருப்பு நிறத்தை மென்மையாக நீக்க உதவுகின்றன.
- முடிவில், பாத்திரங்கள் பளபளப்பாகவும் புதியது போலவும் மாறும்.
- இந்த டிப்ஸ் ஸ்டீல், அலுமினியம் மற்றும் சில பிளாஸ்டிக் பாத்திரங்களுக்கும் பொருந்தும்.
- அதிகப்படியான நேரம் ஊற வைக்காமல், இரவு முழுவதும் போதும்.