அனைவரது வீடுகளில் மிக்ஸி அத்தியாவசிய ஒன்றாகிவிட்டது. இதன் பயன்பாடு தினமும் உண்டு. மிக்ஸியை பயன்படுத்திய பிறகு எவ்வளவு தான் கழுவினாலும், அதன் பின்னாடி இருக்கிற கறைகளை பெரும்பாலும் கவனிக்கவே மாட்டோம். காரணம் அது எவ்வளவு தேய்ச்சாலும் போகாது. இனி கவலை வேண்டாம். எத்தனை வருட பழைய மிக்ஸியாக இருந்தாலும், அதை புத்தம் புதுசாக மாற்றலாம். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- ஒரு பாத்திரம்
- ஒரு கிளாஸ் தண்ணீர்
- பழைய நியூஸ் பேப்பர்
- பல் துலக்கும் டூத்பேஸ்ட்
- சுத்தமான துணி
- ஒரு ஃபோர்க் அல்லது சிறிய குச்சி
செய்முறை:
* முதலில், ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் பழைய நியூஸ் பேப்பர்களை சிறு துண்டுகளாகக் கிழித்து போட்டுக் கொள்ளவும். பிறகு அதில் தண்ணீர் ஊற்றவும்.
* அதில், சிறிது டூத்பேஸ்ட்டைச் சேர்த்து, கையால் நன்றாகக் கரைத்து விட வேண்டும்.
* இப்போது, ஊறவைத்த இந்த நியூஸ் பேப்பரைக் கொண்டு மிக்ஸியின் வெளிப்புறப் பகுதிகளை சுத்தம் செய்யவும்.
* மிக்ஸி ஜார் வைக்கும் இடத்தில் நிறைய அழுக்கு இருக்கும். அந்த இடத்தில் ஊறவைத்த பேப்பர் துண்டுகளை வைத்து, ஒரு ஃபோர்க் அல்லது சிறிய குச்சியால் மெதுவாக சுழற்றுங்கள். இப்படி செய்வதால், உள்ளே இருக்கும் அழுக்குகள் அனைத்தும் எளிதாக வெளியே வந்துவிடும்.
* கடைசியாக, ஒரு சுத்தமான துணியால் மிக்ஸியை நன்றாகத் துடைத்து விடுங்கள்.
* இந்த எளிய முறையைப் பயன்படுத்தி உங்கள் மிக்ஸியைப் புதிது போல மாற்றலாம்.
இந்த வகையில் எளிதாக க்ளீன் செய்து பளபளப்பாக வைத்திருக்க முடியும். இதை வருடக் கணக்கில் செய்யாமல் ஒரே நாளில் தேய்த்து எடுப்பதை விட தினமும் மிக்ஸி ஜாரை கழுவும்போது அல்லது வாரத்திற்கு ஒருமுறை இந்த சொல்யூஷனை ரெடி செய்து கழுவலாம். எப்போதும் மிக்ஸி ஜார் புதுசு போலவே இருக்கும்.
Read more: மகளிர் உரிமைத் தொகை.. ரூ.1000 கிடைக்குமா..? விண்ணப்பித்தவர்களுக்கு ஷாக் தகவல்..!