கூட்டணிக்கு வரும்படி இபிஎஸ் விடுத்த அழைப்பை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தவெக தலைவர் விஜய் நிராகரித்துள்ளனர்.
2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி கூட்டணியை விரிவாக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். தற்போதைய கூட்டணியில் பாஜக மற்றும் தமாகா மட்டுமே உள்ள நிலையில், புதிய கட்சிகளை சேர்த்துக்கொள்ளும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கிடையே திமுக.வை வீழ்த்த வேண்டும் என்ற ஒத்த கருத்தில் பயணிக்கும் சீமான், விஜய் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்தார். ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தி.மு.க.வை எதிர்க்க வேண்டும் என்ற ஒத்த மனமுடைய அனைத்து கட்சிகளும் அ.தி.மு.க.வுடன் ஒன்றிணைய வேண்டும். அந்த வகையில், விஜய், சீமான் தரப்பும் அடங்கும் என்றார்.
இந்த நிலையில் கூட்டணிக்கு வரும்படி இபிஎஸ் விடுத்த அழைப்பை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிராகரித்தூள்ளார். இதுகுறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழகத்தில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று திமுக கூறுகிறது. திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது மற்றொரு கட்சிகள் கூறுகிறது. தீமையை வைத்து தீமையை எப்படி அழிப்பது என கேள்வி எழுப்பி கூட்டணி அழைப்பை நிராகரித்தார்.
தவெகவும் கூட்டணி அழைப்பை நிராகரித்தது. தவெக சார்பில் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “மாற்றத்தை விரும்பும் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர், வெற்றித் தலைவர் விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, புதிய வரலாறு படைக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: குளறுபடிகளின் உச்சம்.. குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் – இபிஎஸ்