ரஜினியை பற்றி தவறாக பேசிய ஆதவை விஜய் கண்டிக்கனும்.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கணும்.. நயினார் காட்டம்..!

aadhav vijay nainar

கடந்த 12-ம் தேதி சென்னையில் நடந்த தவெக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா ரஜினி குறித்து பேசிய பேச்சு ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.. நேற்று பேசிய ஆதவ் “ அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற நினைத்தார் ரஜினிகாந்த். ஆனால் திமுக குடும்பம் மிரட்டியதால், அந்த மிரட்டலுக்கு பயந்து தான் அரசியலுக்கு வராமல் இருந்துவிட்டார்.. விஜய்யிடம் மனவலிமை இருக்கிறது என்பதை நான் சொல்கிறேன்..” என்று பேசியிருந்தார்.


அவரின் இந்த பேச்சுக்கு ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனாவை விஜய் கண்டிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்பும் திரு. ஆதவ் அர்ஜுனாவிற்கு கண்டனம்!

திரைப்படத் துறையில் 50 ஆண்டுகளாகக் கோலோச்சிவரும் சிறந்த கலைஞர், உலகளவில் தமிழ்த் திரைப்படத்தின் முகமாகத் திகழ்பவர், தாதா சாகேப் பால்கே விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற பல முக்கிய விருதுகளைப் பெற்று திரைத்துறையின் இமையத்தைத் தொட்டவர், சிறந்த ஆன்மிகவாதி எனப் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
அவர்கள். மேலும் அனைத்து மூத்த தலைவர்களின் அன்பையும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு மோடி அவர்களுடைய மரியாதையையும் பெற்றவராகத் திகழ்பவர். ஜாதி, மதம், மொழியைக் கடந்து அனைத்துத்தரப்பட்ட மக்களின் பேரன்பைப் பெற்றவர்.

அத்தகைய சிறந்த பண்பாளரைக் குறித்து தவெகவைச் சேர்ந்த திரு ஆத்வ அர்ஜுனா
அவர்கள் பொதுவெளியில் தவறாகப் பேசுவது என்றும் ஏற்புடையதல்ல! அதைப் பார்த்துக் கொண்டு சூப்பர் ஸ்டார் அவர்களின் ரசிகர்களும் சும்மா இருக்க மாட்டார்கள்!

பத்திரிகைகளின் கவனத்தைப் பெறுவதற்காக, தமிழக மக்களின் பேரன்பிற்குச் சொந்தக்காரரான திரு. ரஜினிகாந்த் அவர்கள் குறித்து திரு. ஆதவ் அர்ஜுனா பேசியதை அக்கட்சியின் தலைவர் கண்டிப்பதோடு, இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்ற அறிவுரையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் ரசிகர்களிடம் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்களை மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்..

Read More : அனல் பறக்கும் தேர்தல் களம்..! பாஜக, அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையா..? எண்ட் கார்டு போட்ட தவெக நிர்மல் குமார்..!

RUPA

Next Post

ஒருமுறை பணத்தை டெபாசிட் செய்தால், ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கில் ரூ. 9,250 வரவு வைக்கப்படும்..! அசத்தல் திட்டம்..!

Mon Mar 16 , 2026
இன்றைய நிலையற்ற பொருளாதாரச் சூழலில், சாமானிய மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு ஈட்டிய பணத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதோடு, ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான வருமானத்தையும் பெற விரும்புகின்றனர். சந்தையில் முதலீடு செய்வதற்குப் பல வழிகள் இருந்தாலும், சாமானிய மக்கள் இன்றும் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை வழங்கும் திட்டங்களையே அதிகம் விரும்புகின்றனர். அத்தகைய மக்களுக்குப் பயனளிக்கும் வகையில், அஞ்சல் துறையிடம் (Post Office) பல அற்புதமான திட்டங்கள் உள்ளன. அவற்றில், ‘அஞ்சல் […]
Post Office Investment

You May Like