தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.. அரசியல் தலைவராக மாறி உள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.. மேலும் பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..
இந்த படத்தை கேவிஎன் புரொட்க்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.. இந்த அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
ஆனால் திட்டமிட்ட படி ஜனநாயகன் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.. ஜனநாயகன் படம் தணிக்கை சான்றிதழுக்காக அனுப்பப்பட்ட நிலையில் யு/ஏ சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டது.. ஆனால் ஜனநாயக படத்தை பார்த்த 5 பேர் கொண்ட தணிக்கை வாரிய குழுவில் ஒருவர் மட்டும், யு/ஏ சான்றிதழ் வழங்க ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.. எனினும் ஜனநாயகன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க தணிக்கை குழு முடிவு செய்ததாக கூறப்படுகிறது.. இதனால் அதிருப்தி அடைந்த தணிக்கை வாரிய உறுப்பினர், தணிக்கை வாரிய தலைவருக்கு புகார் அளித்துள்ளார். இதனால் ஜனநாயகன் படம் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது..
னநாயகன் படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று கூறி படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு விசாரணை நேற்றும் இன்றும் நடைபெற்றது.. அப்போது தணிக்கை வாரியம், பட தயாரிப்பு நிறுவனங்கள் இடையே காரசார விவாதங்கள் நடைபெற்றது..
இந்த நிலையில் ஜனநாயகன் படத்திற்கான தணிக்கை சான்றிதழ் பிரச்சனை எப்படி உருவானது என்ற தகவல் வெளியாகி உள்ளது.. ஐஜி அலுவலகத்தில் வெடி வைத்து தகர்ப்பது போன்ற காட்சி, பாதுகாப்புப் படை சின்னங்களால் தான் சிக்கல் என்ற தகவல் வெளியாகி உள்ளது..
வரவிருக்கும் இளைய சமுதாயத்தினர் இதுபோன்ற பிரச்சனையில் ஈடுபட கூடாது என்பதற்காகவே தணிக்கை வாரியம் இந்த காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.. பனையூர் அருகே பூஞ்சேரி என்ற இடத்தில் 100 பேருடன் நடைபெற்ற ஸ்டண்ட் காட்சியால் சிக்கல் என்றும் கூறப்படுகிறது.
Read More : Flash : ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா? சென்சார் சான்றிதழ் தொடர்பான வழக்கில் காரசார விவாதம்.. நாளை தீர்ப்பு..!



