முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று அதிகாலை நடைபயிற்சிக்கு சென்ற போது தலைசுற்றல் ஏற்பட்டது.. இதையடுத்து அவர் வீடு திரும்பிய அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர் தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் சென்றார்.. அப்போது அதிமுகவில் இருந்து திமுகவில் இணைய வந்த முன்னாள் எம்.பி அன்வர் ராஜாவை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றார்.. அவருக்கு உறுப்பினர் அட்டையை வழங்கிய பின்னர் கட்சி சார்ந்த மற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.. அப்போது முதல்வருக்கு மீண்டும் தலைசுற்றல் ஏற்பட்டது..
இதை தொடர்ந்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டார்.. அப்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.. முதல்வரின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.. அடுத்த 3 நாட்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்..
இந்த சூழலில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்று காலை தேனாம்பேட்டை அப்போல்லோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது.. இந்த பரிசோதனைகளுக்கு பின்னர் மீண்டும் கிரீம்ஸ் சாலையில் அப்போல்லோ மருத்துவமனைக்கு முதல்வர் கார் மூலம் வந்தார். தொடர்ந்து அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்..
இந்த நிலையில் துணை முதல்வரும், முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ முதல்வர் நலமாக இருக்கிறார்.. இன்று காலை சில பரிசோதனைகளை எடுக்கச்சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.. அதன்படி அந்த பரிசோதனைகள் செய்யப்பட்டது.. அவரின் உடல் நலம் குறித்து மருத்துவர்கள் அறிக்கை வெளியிடுவார்கள். முதல்வர் நன்றாக இருக்கிறார்.. 3 நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.. முதல்வர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்.. ” என்று தெரிவித்தார்..
Read More : உங்க சேமிப்புக் கணக்கில் பணம் இருக்கா? இதைச் செய்தால், ரூ.5 லட்சம் வட்டி பெறலாம்…