மனித மூளை எப்படி யோசிக்கும்!… இனி பாஸ்வேர்டுகளை ஒரே நிமிடத்தில் கண்டுபிடிக்க!… AI தொழில்நுட்பம் உருவாக்கம்!

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட, பாஸ்காண் (PassGAN) எனும் தொழில்நுட்பத்தின் மூலம், 51% பாஸ்வேர்ட்களை ஒரு நிமிடத்தில் கண்டறிய முடியும் என்று ஆய்வு தெரியவந்துள்ளது.


பெரும்பாலான வலைதளங்கள் தங்கள் பயனர்களிடம் வலுவான பாஸ்வேர்டுகளை உள்ளிடும் டி தெரிவிப்பது வழக்கம். ஆங்கில எழுத்துகள், எண்கள் மற்றும் ஸ்பெஷல் கேரக்டரை பயன்படுத்துமாறு அந்த தளங்கள் தெரிவிக்கும். ஏனெனில் பயனர்களின் தரவுகளுக்கு பாதுகாப்பு வேண்டி இது சொல்லப்படுகிறது. ஆனாலும் சில பயனர்கள் எளிதான மற்றும் நினைவில் வைத்துக் கொள்ளும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவர். இது பொதுவான பாஸ்வேர்டுகளில் அடங்கும். அப்படி பயன்படுத்தும் பாஸ்வேர்ட்களை ரேண்டமாக பயன்படுத்தி சம்பந்தப்பட்ட பயனர்களின் தரவுகளை ஹேக்கர்கள் திருடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ப்ரூட் ஃபோர்ஸ் (brute force) முறை போன்ற வழக்கமான பாஸ்வேர்ட்களை கண்டுபிடிக்கும் முறைகளைப் போலல்லாமல், மனித மூளை எப்படி இருக்கும் என்பதைப் போன்ற தரவுகளை பகுப்பாய்வு செய்து விளக்குவதற்கு இயந்திரங்களைப் பயிற்றுவிக்கும் நரம்பியல் வலையமைப்பை பாஸ்காண் உருவாக்குகிறது. சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ஹோம் செக்யூரிட்டி ஹீரோஸ் நடத்திய சமீபத்திய ஆய்வில், 15 மில்லியனுக்கும் அதிகமான கடவுச்சொற்களின் பட்டியலை வைத்து பாஸ்காணின் திறன்களை சோதித்தது. இந்த ஆய்வின் முடிவுகள் நிறுவனத்திற்கு அதிர்ச்சியை அளித்தது. பாஸ்காண் ஆனது 51 சதவீதம் பொதுவான கடவுச்சொற்களை ஒரு நிமிடத்திற்குள்ளும், ஒரு மணி நேரத்தில் 61 சதவீதமும், ஒரு நாளில் 71% சதவீதமும் மற்றும் ஒரு நாளில் மற்றும் ஒரு மாதத்தில் 81 சதவீதமும் கண்டுபிடிக்க முடியும்.

பாஸ்காண் போன்ற தொழில்நுட்பம், தரவு மீறல் மற்றும் கடவுச்சொல் ஹாஷ்களின் தரவுத்தளங்கள் கசிந்தால் மட்டுமே கடவுச்சொற்களைக் கண்டறியும். கடவுச்சொல் ஹாஷ் என்பது பயனர்களின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டால், உங்கள் கடவுச்சொற்களை ஹேக்கர்கள் உடனடியாக பயன்படுத்த மாட்டார்கள். அதற்கு பதிலாக, அவர்கள் உங்கள் கடவுச்சொற்களின் மறைகுறியாக்கப்பட்ட “ஹாஷ்” க்கான அணுகலைப் பெறுவார்கள். எனவே, பாஸ்காண் உங்களது கணக்குகளை நேரடியாக ஹேக் செய்ய முடியாது. கேப்பிடல் மற்றும் சுமால் (Uppercase, Lowercase) எழுத்துகள், நம்பர் மற்றும் ஸ்பெஷல் கேரக்டர்களுடன் குறைந்தபட்சம் 15 கேரக்டர்கள் கொண்ட பாஸ்வேர்ட்களை கண்டுபிடிக்க, இந்த Al-க்கு பல நூற்றாண்டுகள் வரை ஆகலாம் எனவும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் ‘123456, password, abcdefg, பெயர், பிறந்த தேதி’ என எளிய பாஸ்வேர்டுகளை பயன்படுத்தும் பயனர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

1newsnationuser3

Next Post

இது என்ன அதிசயம்!... குட்டியை ஈன்ற ஆண் பூனை!... திரிபுராவில் ஆச்சரியம்!

Sat Apr 15 , 2023
திரிபுராவில் ஆண் பூனை ஒன்று, பெண் பூனைக்குட்டியை ஈன்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திரிபுராவின் கோமதி மாவட்டத்தில் அணில் பிஸ்வாஸ் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சாம்பல் மற்றும் வெள்ளை நிறம் கொண்ட ‘மோகி’ எனும் ஆண் பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த ஆண் பூனை கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் பூனைக்குட்டியை ஈன்றது.அந்த பூனையை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான ஆர்வமுள்ள மக்கள் அனில் பிஸ்வாஸின் வீட்டிற்கு […]
Cat

You May Like