வயதுக்கு ஏற்ற Tooth paste-ஐ தேர்வு செய்வது எப்படி?. தெரிஞ்சுக்கோங்க!

tooth paste

காலையில் எழுந்ததும் நாம் செய்யும் முதல் வேலை பல் துலக்குவது தான். உடல் சுத்தம் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு வாய் சுத்தமும் அவசியம். உங்கள் பற்களுக்கு ஏற்ற டூத்பேஸ்ட்டை பயன்படுத்த வேண்டும். தற்போது கடைகளில் பலவகையான டூத்பேஸ்டுகள் கிடைக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கங்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே அவற்றை தெரிந்து கொண்டு உங்களுக்கு தேவையான டூத்பேஸ்ட்டை பயன்படுத்துவது உங்களது வாய்வழி சுகாதாரத்தை பாதுகாக்க உதவிகரமாக இருக்கும்.


டூத்பேஸ்ட்களில் வேம்பு, லவங்கம் போன்ற இயற்கைப் பொருள்களும், நுரை ஏற்படுத்த சோடியம் லாரியல் சல்பேட்டும் சேர்க்கப்படுகின்றன. பாக்டீரியா தாக்குதலிலிருந்து பாதுகாக்க ஸ்டேன்னஸ் ஃபுளோரைடு (Stannous Fluoride), ஈரப்பதத்துக்காகச் சார்பிட்டால் (Sorbitol), ஹுமெக்டன்ட் (Humectant) ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இனிப்புச்சுவைக்காக சோடியம் சாக்கரின் (Sodium saccharin) சேர்க்கப்படுகிறது. இதனுடன், உப்பு, ‘சலவை சோடா’ எனப்படும் சோடியம் பை கார்பனேட் (Sodium Bicarbonate), கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், வைட்டமின் டி போன்றவையும் சேர்க்கப்படுகின்றன

புளோரைடு டூத்பேஸ்ட் பொதுவாக அனைத்து வயதினரும் பயன்படுத்தும் டூத்பேஸ்ட் ஆகும். இவை பற்களை வலுப்படுத்தவும், பல் சிதைவை தடுக்கவும் பெரிதும் உதவுகிறது. இந்த டூத்பேஸ்ட்டை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் பயன்படுத்தலாம்.

பெரியவர்களுக்கு நுரை வருவதற்காகச் சேர்க்கப்படும் டிடர்ஜென்ட், நிறத்தை அளிக்கும் ரசாயனங்கள் ஆகியவை அதிகம் இல்லாத டூத்பேஸ்ட்டாக வாங்க வேண்டும். மேலும் முதியவர்களுக்கும் வயோதிகம் காரணமாக, பற்கள் தேய்மானம் அடைந்திருப்பதால் சென்சிட்டிவ்வாக (Sensitive) மாறிவிடும். எனவே, மருத்துவரின் ஆலோசனைப்படி, சென்சிடிவ் பற்பசைகளை உபயோகிப்பது நல்லது.

ஃபுளோரைடு உட்பட பல்வேறு ரசாயனப் பொருட்கள் உள்ள பற்பசையில் ஒரு பட்டாணி அளவு எடுத்து, பல் துலக்கினாலே போதும். பெரியவர்கள் பயன்படுத்துவதைவிடக் குழந்தைகளுக்கு குறைந்த அளவு பயன்படுத்த வேண்டும்.

டூத்பேஸ்ட் வாங்கும்போது கவனிக்கவேண்டியவை: வண்ணமயமான பேஸ்ட்டைவிட வெள்ளை நிற பேஸ்ட்டே சிறந்தது. ஃபுளோரைடு குறைவான பேஸ்ட்டையே தேர்வுசெய்யுங்கள். ஜெல் பேஸ்ட்டுகள் பற்களின் தேய்மானத்துக்குக் காரணமாகும் என்பதால், க்ரீம் பேஸ்ட்டுகளே சிறந்தவை. பற்களை பாலீஷ் செய்வதற்கும், சுத்தப்படுத்துவதற்கும் அப்ரேஸிவ் (Abrasives) எனும் ‘தேய்க்கும் பொருள்’ பயன்படுத்தப்படுவதால் இதன் அளவு குறைந்ததாக இருக்கும் பேஸ்ட்டாகப் பார்த்து வாங்குங்கள்.

Readmore: முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பது பாதுகாப்பானதா?. அதனால் வரும் பிரச்சனைகள் என்ன தெரியுமா?

KOKILA

Next Post

அடி தூள்... இனி ஒரே நேரத்தில் இரண்டு படிப்பு படிக்கலாம்...! யுஜிசி முக்கிய அறிவிப்பு...!

Sun Jun 8 , 2025
உயர் கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரு படிப்புகளைப் பயில்வது தொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை யுஜிசி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக யுஜிசி செயலாளர் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; உயர் கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரு படிப்புகளைப் பயில்வது தொடர்பாக யுஜிசி சார்பில் சமீபத்தில் நடைபெற்ற 589-வது கூட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஜூன் 5-ம் தேதி முதல் நடைமுறைக்கு […]
UGC 2025

You May Like