வீட்டில் தினமும் சமைக்கும் போது பால் வழிவது, எண்ணெய் சிதறுவது போன்றவை சாதாரணம் தான். ஆனால், இதனால் கேஸ் அடுப்பில் கருப்பு, மஞ்சள் நிறக் கறைகள் படிந்து, சில நாட்களில் அடுப்பு முழுவதும் அழுக்காக மாறிவிடும். இதை அகற்ற சில எளிய இயற்கை முறைகள் இருந்தாலும், பலருக்கு அது தெரியாது.
அடுப்பை சுத்தமாக வைத்திருக்க ஏன் அவசியம்? நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், தினசரி பயன்படுத்தும் பொருட்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கேஸ் அடுப்பு அதில் மிக முக்கியம். இதைச் சுத்தம் செய்வதற்கு அதிக செலவு தேவையில்லை.. வீட்டிலேயே கிடைக்கும் சில பொருட்களால் மினுமினுக்கும் ஸ்டவ் கிடைக்கும்!
அடுப்பின் பர்னரில் சிறிய துளைகள் உள்ளன. இவை எண்ணெய், உணவுக் கழிவுகள் செருவதால் அடைந்து, தீ சரியாக எரிவதைத் தடுக்கின்றன. இதனால் அதிக எரிவாயு வீணாகும். ஆகவே பர்னரை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்.
வெங்காய தண்ணீர் முறை: வெங்காயத் துண்டுகளை 20 நிமிடங்கள் தண்ணீரில் வேகவைத்து, குளிர்ந்த பிறகு ஸ்க்ரப் அல்லது ஸ்பாஞ்சை அதில் நனைத்து, அடுப்பில் தேய்க்கவும். இது இயற்கையான முறையில் கறைகளை நீக்கும்.
வினிகர் முறை: வினிகரில் உள்ள அமிலத்தன்மை கறைகளை விரைவாக நீக்கி, அடுப்பை அதன் அசல் நிறத்துக்கு மாற்றும். இரண்டு ஸ்பூன் வெள்ளை வினிகரை அரை வாளி தண்ணீரில் கலந்து, அதைக் கொண்டு அடுப்பை துடைக்கவும். வாரம் இருமுறை இதைச் செய்தால் மிளிரும் விளைவு உறுதி.
பேக்கிங் சோடா + எலுமிச்சை சாறு: ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து, அடுப்பில் தெளிக்கவும். பின்னர் அரை எலுமிச்சை சாற்றை அதன் மீது தெளித்து, ஸ்க்ரப் மூலம் தேய்க்கவும். சில நிமிடங்களில் எண்ணெய் கறைகள் மறைந்து விடும்.



