ஆதார் அட்டையை இலவசமாக டவுன்லோடு செய்வது எப்படி..? ரொம்ப ஈசியான வழி இதோ..!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் உள்ள தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். ஒரிஜினல் ஆதார் கார்டு கையில் இல்லாவிட்டாலும் ஆன்லைன் மூலமாக டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.


ஆதார் தொடர்பான அப்டேட்டுகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.gov.in அல்லது eaadhaar.uidai.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்லலாம். ஆன்லைன் மூலம் ஆதார் கார்டு டவுன்லோட் செய்ய முதலில் மேற்கண்ட இணையதள பக்கத்திற்குச் சென்று முதல் பக்கத்தில் உள்ள my aadhar என்ற ஆப்ஷனில் download aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்களின் ஆதார் எண் அல்லது பதிவு ஐடியை உள்ளிட வேண்டும். உங்களின் முழு பெயர், பின் குறியீடு மற்றும் பக்கத்தில் காட்டப்படும் விவரங்களை உள்ளிட வேண்டும். அடுத்ததாக get one time password என்பதை கிளிக் செய்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி நம்பரை உள்ளிட்டு டவுன்லோட் ஆதார் என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது உங்களின் ஆதார் அட்டை pdf வடிவில் பதிவிறக்கம் செய்யப்படும். இதனை திறப்பதற்கு உங்கள் பெயரின் முதல் நான்கு எழுத்துக்களை மற்றும் உங்களின் பிறந்த ஆண்டு ஆகியவற்றின் கலவையான உள்ளிட வேண்டும். மேலும், ஆதார் அமைப்பு ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்களின் ஆதார் ஆன்லைனில் ஆவணங்களை இலவசமாக புதுப்பிக்க அனுமதி வழங்கியுள்ளது. ஜூன் 14ஆம் தேதி வரை அப்டேட் செயல்முறை அனைத்தும் இலவசம்தான். அனைத்து ஆவணங்களையும் புதுப்பிக்க ஆதார் இணையதளத்தில் செல்லலாம்.

CHELLA

Next Post

ஏசி ஓடினால் கரண்ட் பில் அதிகம் வருகிறதா..? இதுதான் காரணம்..!! இனிமே இந்த தவறை செய்யாதீங்க..!!

Mon Apr 24 , 2023
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், அதிக வெப்பம் காரணமாக பெரும்பாலானவர்கள் தங்களுடைய வீடுகளில் ஏசியை பயன்படுத்துகின்றனர். இரவு முழுவதும் ஏசியை ஆன் செய்தவாறு தூங்குவதால் மின்சார கட்டணம் அதிகமாக வருகிறது. இந்நிலையில், ஏசியை பயன்படுத்தும் போது மின்சார கட்டணத்தை எப்படி சேமிக்கலாம் என்பது குறித்த சில வழிமுறைகளை இங்கு பார்க்கலாம். ‌ ஏசியை குறைந்த வெப்ப நிலையில் வைத்திருக்கக் கூடாது. மனிதனின் உடலுக்கு உகந்த குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி. […]
AC Cooling

You May Like