இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் பெறுவது எப்படி..? இதை மட்டும் கரெக்டா ஃபாலோ பண்ணுங்க..!!

Instagram 2025

தற்போதைய காலகட்டத்தில் இளைய தலைமுறைகள் இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் பொழுதுபோக்காக தளமாக மட்டுமின்றி, சிறிய தொழில் செய்ய மிகப்பெரிய வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது. தங்களுடைய தொழில், பொருட்கள், சேவைகள் என அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் போட்டு பிரபலப்படுத்தி வருகின்றனர்.


அதேபோல், இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோர் அதிகளவில் நமக்கு பாலோயர்ஸ் இருக்க வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்து பாலோயர்ஸ் ஏற்றி வருகின்றனர். ஆனால், அப்படி செய்வதால், உங்களின் கண்டன்ட் தகுதியான நபர்களுக்கு சென்று சேராது. இன்ஸ்டாகிராமை பொறுத்தவரை இயல்பாக பாலோயர்ஸைச் சேர்த்தால் மட்டுமே உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும்.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் உங்கள் கணக்கில் தொடர்ச்சியாக வீடியோக்கள், போட்டோக்கள் என எதையாவது பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியம். மேலும், மக்கள் உங்கள் வீடியோக்களை எளிதாக கண்டுபிடிக்கும் வகையில், முக்கிய சொற்கள் மற்றும் ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்த வேண்டும். உங்களைப் பின்தொடர்பவர்கள் ஏதேனும் கருத்து தெரிவித்தால், அதை லைக் செய்து, பதில் கொடுங்கள். மேலும், அவ்வப்போது உங்களுக்குப் பிடித்தமான விஷயம் மற்றும் ட்ரெண்டில் இருக்கும் தகவல்கள் குறித்து வாக்கு எண்ணிக்கை நடத்தலாம்.

அதேபோல், புதிய ரசிகர்களை ஈர்க்கவும், அதிகமான மக்களை அடையவும் ரீல்ஸ் ஒரு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. உங்கள் ப்ரொஃபைலைச் சிறப்பாக வடிவமைத்து, பொருத்தமான பெயரை கொடுக்க வேண்டும். அதை மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். தெளிவான மற்றும் அடையாளம் காணக்கூடிய ஒரு புகைப்படத்தை உங்கள் ப்ரொஃபைல் போட்டோவாக வையுங்கள். தனிப்பட்ட பிராண்டிங் ஆக இருந்தால் உங்கள் புகைப்படம் உயர் நிறத்தில் (High Resolution) இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

நிறுவனமாக இருந்தால் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவைப் பயன்படுத்துங்கள். இன்ஸ்டா ஸ்டோரி ஹைலைட்ஸை ஒழுங்குபடுத்துங்கள். முக்கியமான ஸ்டோரிகளைப் பிரிவுகளாகத் தொகுத்து வழங்கினால் உங்கள் அக்கவுண்ட் தனித்துவமாக இருக்கும், பொதுமக்களிடமும் எளிதில் கொண்டு சேர்க்கும்.

Read More : உணவு டெலிவரி ஊழியருடன் லிவிங்கில் இருந்த துணை நடிகை..!! கணவர் இருக்கும்போதே காதலனுடன் குடித்தனம்..!! ஆவடியில் அதிர்ச்சி சம்பவம்..!!

CHELLA

Next Post

வங்கியில் உங்களுக்கு லாக்கர் இருக்கா..? ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் உங்களுக்கு எவ்வளவு இழப்பீடு கிடைக்கும்..?

Sat Jun 7 , 2025
இந்தியாவில் வங்கி லாக்கர் வசதிகள் ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதல்கள் மற்றும் தனிப்பட்ட வங்கிகளின் விதிகளின் கீழ் செயல்படுகின்றன. வாடிக்கையாளரின் லாக்கரில் சேமிக்கப்பட்ட உள்ளடக்கங்களின் பதிவுகளை வைத்திருக்க அனுமதியில்லை. மேலும், லாக்கருக்குள் என்ன இருக்கிறது என்பது குறித்து விசாரிக்கவும், வங்கிகளுக்கு உரிமை இல்லை. வங்கியின் அலட்சியம் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் இழப்பு ஏற்பட்டால், வாடிக்கையாளருக்கு வங்கி இழப்பீடு வழங்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, வங்கியின் அலட்சியத்தால் இழப்பு […]
Bank Locker 2025

You May Like