ஜூலை 1 முதல், ஆதார் அங்கீகாரம் பெற்ற பயனர்கள் மட்டுமே, ஆன்லைனில் தட்கல் முன்பதிவு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. ஆதாரை எப்படி IRCTC கணக்குடன் ஆதாரை எப்படி இணைப்பது?
நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்கான இந்திய ரயில்வே தினமும் ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்கி வருகிறது. நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.. பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு சலுகைகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அவசர பயணம் அல்லது திடீர் பயணத்திற்கு முன்பதிவு செய்யும் வகையில் தட்கல் முறை கொண்டு வரப்பட்டது.
தட்கல் என்பது இந்திய ரயில்வேயின் ஒரு விரைவு டிக்கெட் முன்பதிவு முறையாகும். பயணிகள் பயணத்திற்கு ஒரு நாள் முன்னதாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். ஆனால் தட்கல் டிக்கெட் முன்பதிவு என்பது தற்போது எட்டாக்கனியாக மாறிவிட்டது. வெறும் 1 நிமிடத்திலேயே டிக்கெட் காலியாகிவிடுவதாக பயணிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய ரயில்வே தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் சில பெரிய மாற்றங்களைச் செயல்படுத்த உள்ளது. அதாவது ஜூலை 1 முதல், ஆதார் அங்கீகாரம் பெற்ற பயனர்கள் மட்டுமே IRCTC செயலி மற்றும் வலைத்தளம் மூலம் தட்கல் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
இதன் மூலம் ரயில்வே அமைச்சகம் தட்கல் டிக்கெட் முன்பதிவு முறையில் ஒரு பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இதனால் சேட் போட்கள் மற்றும் முகவர்களுக்கு பதில் உண்மையான பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.
ஐ.ஆர்.சி.டி.சி கணக்குடன் ஆதாருடன் இணைக்க என்ன தேவை?
செயலில் உள்ள IRCTC கணக்கு.
ஆதார் எண் அல்லது மெய்நிகர் ஐடி.
OTP சரிபார்ப்புக்கான மொபைல் போன்.
ஐ.ஆர்.சி.டி.சி கணக்குடன் ஆதாரை எப்படி இணைப்பது ?
www.irctc.co.in க்குச் சென்று உள்நுழையவும்.
‘‘My Account’ .என்பதைக் கிளிக் செய்து ‘Authenticate User’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் ஆதார் எண் அல்லது மெய்நிகர் ஐடியை உள்ளிடவும்.
‘‘Verify Details and Receive OTP’ என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.
ஒப்புதல் பெட்டியில் டிக் செய்து ‘Submit’ என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் ஆதார் வெற்றிகரமாக இணைக்கப்பட்டவுடன் உறுதிப்படுத்தல் எஸ்.எம்.எஸ் கிடைக்கும்..
முதன்மை பயணிகள் பட்டியலில் விவரங்களை எப்படி சேர்ப்பது?
IRCTC தளத்தில் உள்ள முதன்மைப் பட்டியல் என்பது பயனர்கள் பயணிகளின் விவரங்களை (பெயர், வயது, பாலினம் மற்றும் அடையாளச் சான்று) முன்கூட்டியே சேமிக்க அனுமதிக்கும் ஒரு அம்சமாகும், இது டிக்கெட் முன்பதிவு செயல்முறையை விரைவாக மாற்றுகிறது..
IRCTC இணையதளத்தில் உள்நுழைந்து ‘My Profile’ என்பதன் கீழ் ‘Master List’ என்பதற்குச் செல்லவும்.
ஆதார் படி பயணிகளின் பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினத்தைச் சேர்க்கவும்.
அடையாளச் சான்றாக ஆதார் அட்டையைத் தேர்ந்தெடுத்து ஆதார் எண்ணை உள்ளிடவும்.
படிவத்தைச் சமர்ப்பிக்கவும். சரிபார்ப்பு நிலை ‘Pending’ எனக் காட்டப்படும்.
நிலையைச் சரிபார்க்க, ‘‘Check Pending Aadhaar Verification’ என்பதைக் கிளிக் செய்யவும்.
பொருந்தியதும், அது ‘Verified’ எனப் புதுப்பிக்கப்படும்.
தட்கல் டிக்கெட்டுகளை விரைவாக முன்பதிவு செய்வதற்கான டிப்ஸ்
முதன்மைப் பட்டியலைப் புதுப்பிக்கவும்: முன்பதிவு செய்வதற்கு முன் பயணிகள் ஆதார் சரிபார்க்கப்பட்டதை உறுதிசெய்யவும்.
IRCTC மின்-பணப்பையைப் பயன்படுத்தவும்: விரைவான கட்டணங்களுக்கு முன்கூட்டியே ரீசார்ஜ் செய்யவும்.
நேரத்தை அறிந்து கொள்ளுங்கள்: ஏசி வகுப்புகளுக்கான தட்கல் காலை 10 மணிக்கும், ஸ்லீப்பர் வகுப்பு காலை 11 மணிக்கும் திறக்கும்.
விரைவாக இருங்கள்: பல தேடல்களைத் தவிர்க்கவும். பயண விவரங்களை நேரடியாக உள்ளிடவும்.
முன்பே சேமிக்கப்பட்ட தகவலைப் பயன்படுத்தவும்: உங்கள் முதன்மை பட்டியலிலிருந்து சரிபார்க்கப்பட்ட பயணிகள் விவரங்களை இழுக்கவும்.
விரைவான செக்அவுட்: ஒரே கிளிக்கில் பணம் செலுத்துவதற்கு இ-வாலட்டைப் பயன்படுத்தவும்.
தட்கல் டிக்கெட் முறையை தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க ரயில்வே அமைச்சகம் ஆதார் சரிபார்ப்பை கட்டாயமாக்கியுள்ளது. கடைசி நேர சிக்கல்களை தவிர்க்க பயணிகள் ஜூலை 1 ஆம் தேதிக்கு முன் தங்கள் ஆதாரை தங்கள் IRCTC கணக்குடன் இணைக்க வேண்டும்.
Read More : திடீரென முடங்கிய ஜியோ.. நெட்வொர்க் கிடைக்காததால் பயனர்கள் அவதி.. குவியும் புகார்..