புகைப்பிடிப்பவர்களுக்கும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் அதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. நுரையீரல் நோய்கள் முதல் இதய நோய்கள் வரை, மோசமான சூழ்நிலைகளில் புற்றுநோய் வரை, இவை புகைபிடிப்பதால் ஏற்படும் ஆபத்துகளாகும். இதுதவிர, புகைபிடிப்பதால் ஒரு குறிப்பிடத்தக்க விளைவும் உள்ளது, அது என்னவென்றால் பற்களில் ஏற்படும் கறை.
புகைபிடிக்கும் கறைகளுக்கான காரணங்கள்: ஒரு சிகரெட்டில் இரண்டு முக்கிய பொருட்கள் உள்ளன: தார் மற்றும் நிக்கோடின். இந்த இரண்டும் உங்கள் பற்களின் நிறமாற்றம் மற்றும் சிதைவுக்கு பங்களிக்கின்றன. அதாவது, சாலைகளில் பயன்படுத்தும் தார் தான் இதில் பயன்படுத்தப்படுகிறது. அந்த தார் ஒரு நாளைக்கு பல முறை புகையாக பல வருடங்களாக உள்ளே செல்வதை கற்பனை செய்து பாருங்கள். அது உங்கள் பற்களின் நிறத்தை மாற்றும்.
நிக்கோடின்: பல ஆண்டுகளாக பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தப்பட்ட அதே பொருள் நிக்கோடின் தான். புகைபிடிப்பதை மிகவும் அடிமையாக்கும் காரணி இதுதான். இது நிறமற்ற மற்றும் மணமற்ற இரசாயன கலவை ஆகும், இது இயற்கையாகவே புகையிலை இலைகளில் காணப்படுகிறது. சிகரெட் புகைக்கும்போது அல்லது புகையிலை பொருட்களை மெல்லும்போது இது உங்கள் உடலில் நுழையும் போது, அது உங்கள் பற்களில் நிக்கோடினால் கறை படிந்து, பிற கடுமையான பல் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
கறைகளை எவ்வாறு அகற்றுவது? டெல்லியில் உள்ள தீரத் ராம் ஷா மருத்துவமனையின் பல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சோமா ஷிவானி, பற்களில் உள்ள கறைகளை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்த சில பயனுள்ள குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். புகைபிடிப்பதை நிறுத்தாமல், கறைகளை அகற்ற முயற்சிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று டாக்டர் சோமா கூறுகிறார்,
புகைபிடிப்பதை விட்டுவிட்டால், ஆரோக்கியமான வாய்வழி சுகாதாரத்தைப் பராமரிப்பது எளிதாக இருக்கும். ஒரு நாளைக்கு இரண்டு முறை இரண்டு நிமிடங்கள் பல் துலக்கவேண்டும்.ஃப்ளாஸ் செய்வது, சர்க்கரை மற்றும் ஒட்டும் உணவுகளை சாப்பிடாமல் இருக்கவேண்டும். பற்களில் உள்ள கறைகளை நீக்குவதற்கு பேக்கிங் சோடா மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துவது ஒரு வித்தியாசமான முறையாகும். “ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடாவை எட்டு அவுன்ஸ் தண்ணீருடன் சேர்த்து, அதை உங்கள் வாயில் சுமார் இரண்டு நிமிடங்கள் சுற்றிக் கொப்பளிக்கவும். அதைத் துப்பிவிட்டு, உங்கள் வாயை தண்ணீரில் கழுவவும்,” என்று டாக்டர் சோமா பரிந்துரைக்கிறார்.