ஒரு நாளின் வெற்றி, பெரும்பாலும் அதன் காலைப் பொழுதை நாம் எப்படி செலவழிக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. பரபரப்பின்றி, நிதானமான தொடக்கம் இருந்தால் மட்டுமே அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் தெளிவுடனும் செயல்பட முடியும். உங்கள் இன்றைய நாளை அழகாக்கி, வெற்றிகரமாக மாற்ற உதவும் சில அத்தியாவசியக் காலைப் பழக்கவழக்கங்களைப் பார்ப்போம்.
அதிகாலை எழுந்திருங்கள்: கூடுதல் நேரத்தை உருவாக்க இதுவே முதல்படி. நிதானமாக செயல்படவும், பரபரப்பைத் தவிர்க்கவும் இது உதவுகிறது.
மொபைலை ஒதுக்கி வையுங்கள்: படுக்கையில் இருந்து எழுந்தவுடன் ஃபோனைப் பார்ப்பதைத் தவிர்ப்பது அவசியம். இது உங்கள் காலை நேரத்தை வீணடித்து, உடனடியாக உங்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிவிடும்.
திட்டமிடல்: அன்றைய நாளில் செய்ய வேண்டிய முக்கியப் பணிகளைத் தோராயமாக மனதிலோ அல்லது குறிப்பு எடுத்தோ திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இது மறதியைத் தவிர்த்து, நாள் முழுவதும் இலக்குடன் செயல்பட உதவும்.
தியானம் செய்யுங்கள்: காலை நேரத்தில் மனம் ரிலாக்ஸாக இருக்கும். இந்த நேரத்தில் தியானம் செய்வது கவனக்குறைவைத் தடுத்து, தெளிவான எண்ணங்களுடன் மன அழுத்தமின்றிச் செயல்பட உதவுகிறது.
தண்ணீர் அவசியம்: எழுந்தவுடன் முதலில் தண்ணீர் குடிப்பது உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்கி, செரிமான அமைப்பைத் தூண்டி, சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
உடற்பயிற்சி: நடைப்பயிற்சி, ஜாக்கிங் போன்ற சிறு பயிற்சிகள்கூட உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி, நாள் முழுவதும் உங்களை புத்துணர்வோடு வைத்திருக்க உதவுகிறது.
குளிர்ந்த நீர் குளியல்: முடிந்தால் குளிர்ந்த நீரில் குளிப்பது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். குளிர்ந்த நீர் ஒத்துக் கொள்ளாதவர்கள், வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.
காஃபி/டீ தவிர்ப்பு: வெறும் வயிற்றில் காஃபின் கலந்த பானங்களைக் குடிப்பது, உப்புசம் மற்றும் அமிலச்சுரப்பு போன்ற செரிமானப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். எனவே, இதைக் கவனமாகக் கையாளவும்.
காலை உணவு கட்டாயம்: அல்சர் போன்ற பிரச்சனைகளை தவிர்க்க, காலை உணவைத் தவிர்ப்பது கூடாது. துரித உணவுகளைத் தவிர்த்து, முடிந்தவரை புரதச்சத்துகள் நிறைந்த, தானிய வகை உணவுகளை உட்கொள்வது உடலுக்கு நீடித்த ஆற்றலைக் கொடுக்கும்.
முன்கூட்டியே புறப்படுங்கள்: அலுவலகத்திற்கு வழக்கத்தைவிட 15-20 நிமிடங்கள் முன்கூட்டியே செல்லும் விதமாக கிளம்புங்கள். இது கடைசி நிமிட பரபரப்பை தவிர்த்து, பணியை நிதானமாகவும் அழுத்தமின்றியும் செய்ய உதவும்.
Read More : காலை உணவில் ஓட்ஸ்..!! கொலஸ்ட்ராலுக்கு குட்பை சொல்லுங்க..!! தினமும் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?



