ராஜஸ்தானின் சிராவா பகுதியில் உள்ள நாரி கிராமத்திற்கு அருகே இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மலையின் ஒரு பகுதி பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. இருப்பினும், இந்த சம்பவம் கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.. சுரங்க ஒப்பந்தக்காரர்கள் இப்பகுதியில் சட்டவிரோதமாக செயல்படுவதால் அடிக்கடி இதுபோன்ற நிலச்சரிவு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்..
நேற்றிரவு இரவு முதல் இப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில், மீண்டும் பலத்த மழை பெய்தது. சிறிது நேரத்திலேயே, கிராமவாசிகள் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு மலையில் அசாதாரண அசைவுகளை கவனித்தனர்.
உடனடியாக அவர்கள் பாதுகாப்பான தூரத்திற்கு சென்று தஞ்சமடைந்தனர்.. சிறிது நேரத்திற்குப் பிறகு, மலையின் ஒரு பெரிய பகுதி இடியுடன் கூடிய சத்தத்துடன் இடிந்து விழுந்தது.. இதனால் அப்பகுதி முழுவதுமே தூசி மண்டலமாக காட்சி அளித்தது.. மேலும் அருகிலுள்ள பகுதியே குலுங்கியது. விதிமுறைகளை மீறி மலையில் பரவலாக வெட்டியெடுக்கப்பட்டதாக கிராமவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
நிலச்சரிவின் அதிர்வுகள் சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்டதாக சிலர் கூறினர். அருகிலுள்ள அரசுப் பள்ளி கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சிராவா தாசில்தார் கமல்தீப் பூனியா சம்பவ இடத்தைப் பார்வையிட்டு நிலைமையை மதிப்பாய்வு செய்தார். மலையிலிருந்து விலகி இருக்குமாறு கிராம மக்களை அவர் வலியுறுத்தினார், மேலும் முறையான அறிக்கை தயாரிக்கப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தினார்.
Read More : இந்தியாவிலேயே கள்ளக்காதல் அதிகமாக இருக்கும் நகரம் இது தான்.. !தமிழ்நாட்டில் தான் இருக்கு! ஷாக் லிஸ்ட்..